கர்நாடக மாநிலம் மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க மாநில தலைவர், திரு.K.அண்ணாமலை IPS அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்! நடைபெறும் அறிவித்தது தமிழக பா.ஜ.க இந்த நிலையில் நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.
செய்தியாளர் ஒருவர் தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என மத்திய அரசு சொல்லிவிட்டது பின் ஏன் இந்த போராட்டம் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை சரவெடியாய் வெடித்தார். மீடியா நண்பர்களுக்கு தெரியும் நீட் தேர்வு என்பது எடுக்க முடியாது அனைவருக்கும் தெரியும் பின் ஏன் ஊடகங்களில் விவாதம் செய்து வருகிறீர்கள். என எதிர் கேள்வி கேட்டார்.
மேலும் அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார்கள் என்பதை செய்தியாகவும் விவாதங்களாகவும் நடத்தீனீர்கள். மேலும் கடந்த 3 மாதங்களாக நீட் தேர்வு குறித்து திமுக நடத்திய நாடகங்களால் பாதி மாணவ மாணவியர்கள் நீட் தேர்வுக்கு தயாராகாமல் உள்ளார்கள்!
‘நாங்கள் முதலில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது. நீட் தேர்வு எப்படி வந்தது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மருத்தவ இட ஒதுக்கீடு நீட் தேர்வால் ஏற்படும் சமூக நீதி பற்றி எடுத்து கூறி வருகிறோம் அதை மக்களிடத்தில் மீடியாக்கள் நீங்கள் சொல்லிருக்கலாம்அல்லாவா. என மீடியாவை கதற விட்டுவிட்டார் அண்ணாமலை