Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

இது அண்ணாமலையின் சபதம் ! FIR எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா ? திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை

Oredesam by Oredesam
December 26, 2024
in அரசியல்
0
Annamalai

Annamalai

FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:நான் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? மக்களுக்கு பயன்படுகிறதா என எனக்கு நானே கேள்வி கேட்கிறேன். சித்தாந்தம் சித்தாந்தம் என தொங்கிக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டு உள்ளோமா என என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டு உள்ளேன். இன்று காலையில் இருந்து எனக்குநானே கேட்டுக் கொள்ளும் கேள்வி, நான் அரசியலில் தொடர வேண்டுமா என்ற கேள்வி.

தமிழகத்தில் பட்டப்பகலில் கவர்னர் மாளிகையில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் அண்ணா பல்கலையில் ஒரு கட்டடத்திற்கு பின்னால், கொடூரமாக சித்ரவதை செய்து, எதற்கு பெண்ணாக பிறந்தோம் என நினைக்கும் அளவுக்கு ஒரு கொடூரமான செயல் சென்னையில் நடந்துள்ளது. அது வழக்கம் போல் அரசியல் ஆகி உள்ளது. பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறோம் என்று சொல்வதை விட எங்கள் அரசியல் பாதையை தீ்ரமானிக்கும் தருணமாக இதனை பார்க்கிறேன்

READ ALSO

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. ஞானசேகரன் திமுக.,வில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பில் உள்ள ஆள் . ஏற்கனவே குற்றங்கள் உள்ள ஆள் திமுக.,வில் இணைத்து கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைதளத்தில் பதிவிடவும் பதவி தேவைப்படுகிறது.கட்சி பத்திரிகையில், அவரது பெயர் உள்ளது. அக்கட்சி பத்திரிகையிலும் வந்துள்ளது.

எங்களுடைய குற்றச்சாட்டு அவர் திமுக.,வில் இருப்பது இல்லை. ஒரு குற்றவாளி இதேபோல் கொடூர செயலை செய்தவன், திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்டு, அமைச்சர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து, உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் காட்ட நான் திமுக., காரன் என்ற காட்ட புகைப்படம் தேவைப்படுகிறது.ரவுடி ரிஜிஸ்டரில் தனது பெயர் வரக்கூடாது என்பதற்கு அது தேவைப்படுகிறது. அரசியல் அடையாளத்திற்கு தேவைப்படுகிறது. அதை வைத்து மறுபடியும் ஒரு குற்றத்தை செய்துள்ளான். இதுதான் எங்களின் கோபம். அவன் திமுக.,வில் இருக்கிறது கோபம் கிடையாது. திமுக என்ற போர்வை குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது.

தி.மு.க, என்ற போர்வை இருந்ததினால் மட்டும் தான் இந்த குற்றவாளி அந்த பெண் மீது கை வைத்துள்ளான். திமுக கட்சி பதவி இருக்கிறது. அமைச்சர் பக்கத்தில் இருக்கிறான் என்பதற்காக ஸ்டேசனில் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே இதேபோன்ற ஒரு குற்றத்தை செய்திருக்கிறான். அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்துள்ளான்

எப்ஐஆர் எப்படி வெளியானது. போலீஸ் துறையைத் தவிரவேறு யாரும் எப்ஐஆர்.,ஐ வெளியில் விட முடியாது.

அது ஒரு எப்.ஐ. ஆரா. , படிக்காதவன் எழுதினால் கூட ஒழுக்கமா எழுதுவான்.அதை பார்க்கும் போது, குற்றம் செய்தது பெண்ணா? குற்றம் செய்தது அந்த அயோக்கியனா என சந்தேகம் எழுகிறது. அந்த பெண் குற்றம் செய்தது போல் எப்ஐஆர் எழுதப்பட்டு உள்ளது. அதை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. காக்கிச்சட்டை அணிந்து இந்த எப்ஐஆர் எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா ? இந்த எப்ஐஆர்., கோர்ட்டில் நிற்குமா?

மொபைல் எண் அப்பா பெயர், ஊர் பெயர் வெளியாகி உள்ளது. இதற்கு வெட்கப்பட வேண்டும். குடும்பத்தை நாசம் செய்துவிட்டீர்கள். ஏழு தலைமறைக்கு ஒரு கறுப்பு அடையாளம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்களா?

மூன்று மாதம் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. அண்ணாமலை திரும்பி வந்ததால், மறுபடியும் கலவரம் வெடித்தது என அமைச்சர் சொல்கிறார். இதற்கு வெட்கப்படணும். நீங்கள் எல்லாம் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படணும்கட்சி பதவியில் இருப்பதால் மரியாதையாக பேசி கொண்டு உள்ளேன்.

தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற வெங்காய பொறுப்பில் இருக்கிறேன். அதனால் மரியாதையாக பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்ததால் மரியாதையாக பேசிக் கொண்டு இருக்கிறேன்.வீதிக்கு தனி மனிதனாக வந்தால் வேறு மாதிரி இருக்கும். திமுக., பொறுப்பில் இருந்ததால் அவனை சோதனை செய்யவில்லை. அதனால் அவன் தைரியமாக வெளியே வந்தான்.

கட்சி தலைவராக தொண்டராக நான் ஒரு சபதம் எடுத்துள்ளேன். எத்தனை ஆர்ப்பாட்டம் நடத்துவது. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போனால், முன்னாள் கவர்னரை பிடித்து வைத்துள்ளனர். நாயை பிடிப்பது போல் பிடித்து வைத்துள்ளனர். எங்கள் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை என ஆர்ப்பாட்டம் செய்கிறோமா? இனிமேல் ஆர்ப்பாட்டம் வேலையெல்லாம் இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கு வீ டு முன்பு போராட்டம் நடக்கும் வீட்டிற்கு வெளியே வந்து பா.ஜ., தொண்டன் போராட்டம் நடத்துவான்.நாளை எனக்கு நானே சாட்டை அடி கொடுக்க கூடிய நிகழ்வை நாளை நடத்தப்போகிறேன். நாளை காலை 6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போகிறேன்திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு போட மாட்டேன்.நாளையில் இருந்து திமுக ஆட்சியில் இருந்து இறங்கும் வரை செருப்பு போட மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பை கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருக்க போகிறேன் பிப்.,2வது வாரம் ஆறுபடை வீட்டிற்கு சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்.

சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள். கேட்டால் கட்சி போர்வைக்குள் ஒழிந்து கொள்வீர்கள். நாளையில் இருந்து எனது அரசியலும் இப்படித்தான் இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உங்களுக்கு எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்த எப்ஐஆர் வெளியில் விடப்பட்டு உள்ளது.அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டுமே வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். எனக்கு இதுதான் வேலையா?சிறைத்துறை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வேலையை செய்துள்ளீர்களா ?தப்பு நடந்தால், அதை வெளியில் கொண்டு மக்களிடம் கொண்டு வைப்பது எங்கள் வேலை. பதில் சொல்வது உங்கள் வேலை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

பேட்டி முடிந்ததும், அண்ணாமலை கூறியபடி செருப்பை கழற்றினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து  வழிகாட்டியை  வெளியிட்டது மத்திய அரசு !

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள்.

May 18, 2020
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

June 30, 2021
“உதயநிதி ஸ்டாலின் குரங்கு போன்று சேட்டை செய்கிறார்…” உதயை வறுத்தெடுத்த ராஜேந்திர பாலாஜி…

“உதயநிதி ஸ்டாலின் குரங்கு போன்று சேட்டை செய்கிறார்…” உதயை வறுத்தெடுத்த ராஜேந்திர பாலாஜி…

January 10, 2021
உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

உத்திர பிரேதேசத்தில் யோகி யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! பிரமாண்ட வெற்றிக்கு குறி வைத்த யோகி ஆத்யநாத்!

July 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x