தமிழக அரசியலில் அண்ணாமலை யை வைத்து திமுக மற்றும் அதிமுகவுக்கு இனிமா கொடுத்து கொண்டு இருக்கும் பிஜேபிஆந்திர அரசியலில் அண்ணாமலை மாதிரியே விருப்ப ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஆந்திர மக்களால் ஜேடிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் லட்சுமி நாராயணா அவர்களை பிஜேபியில் இணைய வைக்க இருக்கிறது.
தென்னிந்திய மாநிலங்களில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வரவும் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் பிஜேபியை அதிகமான லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற வைக்கவும் அமித்ஷா நடத்தி வரும் மிஷன் சௌத் இந்தியாவில் மிக முக்கியமான ஆந்திர அரசியலை கைப்பற்ற மிக தீவிரமாக ஆலோசனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறார் பிஜேபியின் ஸ்ட்ரேடஜிஸ்ட்களில் ஒருவரான திரிபுரா வெற்றி நாயகன் சுனில் தியோடரை ஆந்திர மாநில பொறுப்பாளராக கொண்டு வந்து 3 வருடமாக ஆந்திர அரசியலை கைப்பற்ற பிஜேபி போராடிக் கொண்டு இருக்கிறது.
ஆனாலும் சுனில் தியோடரால் ஆந்திராவில் பிஜேபியை பெரியளவில் வளர்க்க முடியவில்லை என்பதால் அமித்ஷா வியூகங்களை மாற்ற ஆரம்பித்துவிட்டார்.இதன் விளைவாக மீண்டும் பிஜேபி தெலுங்கு தேசம் இடையே கூட்டணி ஏற்படும் என்கிற பேச்சுகள் அடிபட ஆரம்பித்து இருக்கிறது.
மோடியை சந்திரபாபு நாயுடு சந்தித்ததும் அதற்கு பிறகு சந்திரபாபுநாயுடு வின் மகன் நர லோகேஷ் அமித்ஷாவை சந்தித்ததும் ஆந்திராவில் மீண்டும் பிஜேபி தெலுங்குதேசம் இடையே கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக ஆந்திர மீடியாக்கள் கூற ஆரம்பித்து விட்டன.
பிஜேபிக்கும் வேறு வழியில்லை. ஜெகன் மோகன் ரெட்டியுடன் கூட்டணி வைக்க முடியாது. இப்பொழுது கூட்டணியில் உள்ள ஜனசேனா வருகின்ற லோக்சபா தேர்தலில் நிச்சயமாக பிஜேபியை கழற்றி விட்டு தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பதால் பிஜேபியும் வேறு வழியின்றி தெலுங்கு தேச கூட்டணியை நோக்கியே போயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதனால் வருகின்ற லோக்சபா தேர்தலில் பிஜேபி தெலுங்கு தேசம் கூட்டணி உறுதி என்றாலும் கூட்டணியில் பிஜேபியின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் உள்ள வலுவான அரசியல் தலைவர்களையெல்லம் பிஜேபிக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.ஆந்திராவின் முன்னாள் முதல் அமைச்சரான கிரன் குமார் ரெட்டி பிஜேபியில் இணைய தயாராகி வருகிறார்.
இவரை தொடர்ந்து காங்கிரசில் எஞ்சி இருக்கும் தலைவர்களும் பிஜேபியை நோக்கி வர இருக்கிறார்கள் .இவர்களை விட முக்கியான ஒரு அரசியல் வாதி பிஜேபியில் இணைய இருக்கிறார்.அவர் தான் லட்சுமி நாராயணா ஐபிஎஸ்.மகாராஸ்டிரா மாநில காவல்துறையின் ஏடிஜிபி பொறுப்பில் இருந்து 7 வருடங்களுக்கு சர்விஸ் இருந்தும் அதை உதறி தள்ளி விட்டு 2018 ல் விருப்ப ஓய்வு அளித்து ஆந்திர அரசியலுக்கு ஏன் வந்தார்? என்பது மோடி அமித்ஷாவுக்கு தான் தெரியும்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள் கிட்டத்தட்ட அதே காலத்தில் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும் கர்நாடாகாவில் இருந்து தன்னுடைய ஐபிஎஸ் வேலை யை உதறி விட்டு தமிழகம் வந்தார்.ஆக அண்ணாமலை மற்றும் லட்சுமிநாராயணா இருவரும் பணியில் இருக்கும் பொழுதே தங்களின் ஐபிஎஸ் வேலையை துறந்து அரசியலுக்கு வருவதற்கு பின்னால் பிஜேபி தான் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
1990 ல் இந்தியாவிலேயே முதலிடத் தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற லஷ்மி நாராயணா ஐஏஎஸ் வேண்டாம் என்று ஐபிஎஸ் ஆகி மகாராஸ்டிரா மாநிலத்தில் தீவிர வாத தடுப்பு பிரிவில் சேர்ந்தார். அன்றிலிருந்து இப்பொழுது மகாராஸ்டி ரா ஏடிஜிபி வரையிலும் சிபிஐ இணை இயக்குனராகவும் அவர் ஆற்றிய பணியினை இனி எந்த ஒரு ஐபிஎஸ் ஆபிசராலும் செய்ய முடியாது.
ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்த ரட்சகர் என்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள் அடையாளம் கண்டு போற்றி புகழ்ந்து வரும் ஐபிஎஸ் அதிகாரியான வி வி லட்சுமி நாராயணா மகாராஸ்டிரா மாநிலத்தில் ஏடிஜிபியாக இருந்து 2018 ல் ராஜினாமா செய்து விட்டு ஆந்திர அரசியலில் கால் வைத்த லட்சுமி நராயணா 2019 லோக்சபா தேர்தலை ஒட்டி பிஜேபியில் இணைவார் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்பொழுது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கிளப்பி விட்ட ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துதர மோடி அரசு மறுக்கிறது என்கிற பிரச்சாரம் ஆந்திராவில் பிஜேபியின் அரசியலையே அஸ்தமிக்க வைக்க பிஜேபியில் இணைய காத்து இருந்த லட்சுமி நாராயணாவை மாற்று வழியை யோசிக்க வைத்தது.
அதனால் அப்பொழுது பவன் கல்யாணின் ஜனசேனாவில் சேர்ந்து 2019 லோக்சபா தேர்தலில் விசாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் போட்டி யியிட்டு சுமார் 3 லட்சம் வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.ஆந்திர மக்களிடையே லட்சுமி நாராயணாவுக்கு தனி செல்வாக்கு இருந்தாலும் ஓய்எஸ் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் என்கிற இரண்டு மாபெரும் அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வரும் அரசியல் போட்டியில் அவருடைய தனி மனித செல்வாக்கு தோல்வி அடைந்து விட்டது.
இதனால் அரசியலில் இருந்து விலகநினைத்த லட்சுமி நாராயணா ஜனசேனாவில் இருந்து விலகி மக்கள் நலன்சார்ந்த கூட்டங்களை நடத்தி மக்களிடையே நெருக்கமாகவே இயங்கி கொண்டு இருக்கிறார்.ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய கூட்டங்களில் பங்கு பெற்று இருப்பதன் மூலமாக லட்சுமி நாராயணா பிஜேபியில் இணைவதை ஆர்எஸ்எஸ் அமைப்பும் வரவேற்க காத்து இருக்கிறது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த அண்ணாமலை அவர்களை தட்டிக்கொடுத்து தமிழக பிஜேபி தலைவராக கொண்டு வந்து தமிழக அரசியலை மாற்றிக் கொண்டு இருக்கும் பிஜேபி தலைமை ஆந்திராவில் பிஜேபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல லட்சுமி நாராயணா தான் சரியான ஆள் என்கிற முடிவுக்கு வந்து
அவருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.லட்சுமி நாராயணாவும் விரைவில் பிஜேபியில் இணைந்து ஆந்திர மாநில பிஜேபி தலைவராகி ஆந்திர அரசியலை கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னொரு முக்கியமானவிசயம் என்னவெனில் ஆந்திரா மாநில அரசியலை ரெட்டி நாயுடுகளுக்கு\இணையாக காபுக்களை முன் வைத்து அரசியல் செய்ய நினைத்து வரும்நிலையில் காபு இனத்தை சார்ந்த லட்சுமி நாராயணா பிஜேபிக்கு ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழும் ஏழைகள் விவசாயிகள் மற்று ம் இளைஞர்கள் மத்தியில் லட்சுமி நாராயணா தான் நிஜமான ஹீரோ ஏனென்றால் இவரால் ஜெயிலுக்கு போனவர்கள் யாரெல்லாம் தெரியுமா? கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள் ள ஒபலாபுரம் சுரங்க கம்பெனியில் லட்சுமி நாராயணா நுழைந்த பிறகு தான் கர்நாடகா அரசியலில் கொடி கட்டி ப்பறந்த ரெட்டி பிரதர்ஸ்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அதோடு ரெட்டி பிர தர்களின் மகாகேடியான ஜனார்த்தன ரெட்டியை ஜெயிலில் தள்ளி அவரின் வாயாலேயே சுரங்க ஊழலில் ஆந்திராவில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு உள்ள தொடர்பை உறுதி செய்து ஜெகனையும் ஜெயிலில் தள்ளியவர் லட்சுமி நாராயணா.ஆந்திர காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் முகமான ராஜ சேகர ரெட்டியின் காலத்தில் துபாயை சேர்ந்த ஈஎம்ஆர் ரியல் எஸ்டேட் கம்பெனி ஆந்திர மாநில தொழில் கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்ட பவுல்டர் ஹில்ஸ் ப் ராஜெக்ட்டில் புகுந்து விளையாடிய காங்கிரஸ் கட்சியின் ஊழலை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ இணை இயக்குனராக லட்சுமி நாராயணா விசாரித்து.
இதிலும் ஜெகன் மோகன் ரெட்டியை கை து செய்து ஜெகனின் சொத்துக்களை முடக்கியவர்.இதை விட முக்கியமான வழக்கு ஒன் று தான் இன்றும் ஆந்திர மக்களின் மனதில் லட்சுமி நாராயணாவை நிலைத்து நிற்க வைத்துள்ளது .சத்யம் கம்யூட் டர்சின் சேர்மன் ராமலிங்க ரா ஜுவை ஜெயிலில் தள்ளியது தான்.
அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றி சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்த ராமலிங்க ராஜூ வை பயன்படுத்தி வளர்ந்தவர்கள் தான் ராஜசேகர ரெட்டியும் அவருடைய மகன் ஜெகன் மோகன் ரெட்டியும்.இப்படி ஆந்திர மாநிலத்தை உலுக்கிய ஊழல்களை எல்லாம் விசாரித்து அதற்கு காரணமானவர்களை ஜெயிலில் தள்ளி அவர்களுக்கு தண்டனை வாங்கிகொடுத்ததன் மூலம் ஆந்திர மக்களின் நம்பிக்கை நாயகனாக இன்றும் இருக்கிறார் லட்சுமி நாராயணா ஐபிஎஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை சரித்து அவரை சிறைக்கு அனுப்பியதன் மூலமாக ஜெகன் மோகன் ரெட்டியின் தீவிர எதிரியாக மாறிய லட்சுமி நாராயணாவை பிஜேபிக்கு கொண்டு வருவதன்மூலமாக ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் சாம்ராஜ்ஜியத்தையும் முறியடித்து 2024 ல் ஆந்திராவில் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கும் பிஜேபியின் கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்.
கட்டுரை :- விஜயகுமார் அருணகிரி.