தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வந்த மற்ற மாணவர்களுக்கு இடையே சண்டை நடந்துள்ளது. மாணவர்களின் சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் வீட்டுக்கு ஆட்களை அழைத்து கொண்டு தாக்கியுள்ளர்கள் சகா மாணவர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது மகன் ஹரிபிரசாத் (17). இவர் பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர். கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு காமர்ஸ் (கணக்குப்பதிவியல்) பிரிவில் படித்து வருகிறார். அதே பள்ளியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகுரு (17), ஷேமந்த் குமார் (17) ஆகியோர் 11ம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவருக்கு இடையே சிறிய பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் சாதி ரீதியான மோதலாக மாறி வியாழக்கிழமை பிற்பகல் இருவருக்கும் இடையே பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதில் ஒருவரின் நண்பரான 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஹரி பிரசாத் விலக்கி விட்டுள்ளார்.
அப்போது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீ எப்படி எங்கள் விஷயத்தில் தலையிடலாம் என ஹரி பிரசாத் மீது அந்த இரு மாணவரில் ஒருவர் பிரச்சனை செய்து உள்ளார். அதன்பிறகு பள்ளி வேலை நேரம் முடிந்து வழக்கம்போல அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், ஹரி பிரசாத்திடன் பிரச்சனை செய்த மாணவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ஹரி பிரசாத்தின் சொந்த ஊரான லட்சுமிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தபோது ஹரி பிரசாத் லட்சுமிபுரத்தில் உள்ள கோயில் திடல் அருகே சென்று கொண்டிருந்ததை பார்த்த அந்த கும்பல் ஹரி பிரசாத்தை சுற்றி வளைத்து சாதியைச் சொல்லித் திட்டி சரமாரியாக தாக்கி காயப்படுத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்று தலைமறைவாகினர்.
ஏற்கனவே நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















