தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளசாராயத்தால் 60 நபர்களுக்கும் மேற்பட்டோர் இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்குகொண்டவர்கள் சிலபேர் மது அருந்திவிட்டு தான் கலந்துகொண்டார்கள். காசு பார்க்க ஒரு கட்சி தேர்தல் நேரம் வரும்போது பேரம் பேச ஒரு கட்சி, என பல கட்சிகள் தமிழகத்தில் வலம்வருகிறது. இதை வைத்துதான் ஆளும் அரசும் அரசியல் செய்து வருகிறது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.
இதற்கிடையே, பெண் காவலரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் தள்ளிவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.மாநாடு ஆரம்பித்ததும் ஒரு பகுதியில் கூடிய தொண்டர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து மாநாட்டு மேடையை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளில் பெண் காவலர்களுக்கும் சிக்கிக் கொண்டனர்.மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்ற காரை வழிமறித்த பெண் காவலரை விசிகவின் பெண் மற்றும் ஆண் நிர்வாகிகளும் சேர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து தள்ளி விட்ட சம்பவமும் நடந்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















