தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சந்திரசேகரன். 2022ம் ஆண்டுக்கான தினசரி காலண்டரை வழங்கியுள்ளார். அந்த தினசரி காலண்டரில் எப்போதும் போல் தலைவர்கள் பிறந்த நாள், மறைந்த நிர்வாகிகளின் நினைவு நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கிருஸ்துவ பண்டிகை நாட்கள்,முஸ்லீம் பண்டிகை நாட்கள் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால், ஹிந்து பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாள் என்ற தலைப்பில் விடுமுறை நாட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹிந்துக்கள் பண்டிகையை அரசு விடுமுறை நாள் என குறிப்பிடும் இந்த பகுத்தறிவாதிகள், அதே காலண்டரில் மனையடி சாஸ்திரம், வாஸ்து நாள், சுபமுகூர்த்த நாள், ஓரைகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க.,வினர், தங்கள் ஒவ்வொரு செயலிலும், ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று வெளிக்காட்டி வருகின்றனர். ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்காமல் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும். உடனடியாக காலண்டரில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும்
இல்லாவிடில் இது உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொருஇந்துக்கள் வீட்டிலும் எதிரொலிக்கும் என பாஜகவினர் கூறி வருகிறார்கள். மேலும் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத திமுக எப்படி காலண்டரில் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தமுடியும்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.

















