கேஜ்ரிவால் தில்லி நிஜாம் மாதிரி, தான்தோன்றித்தனமான முடிவுகளால் நிகழ்வது என்ன ?

கேஜ்ரிவால் தில்லி நிஜாம் மாதிரி, தான்தோன்றித்தனமான முடிவுகளால், தில்லி தத்தளிக்கிறது. முதல் அலையின்போது கேஜ்ரிவால் நம்பர்களோடு விளையாடினார்.. கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்தது.

இந்த முறை, அந்த சௌகர்யமும் அவருக்கு கிடைக்கவில்லை.

அவரின் சார்டுகள், பவர்பாயின்டுகள், பை டயக்ராம்லாம் கலராக இருந்தாலும், நிதர்சனமான உண்மைகள், ஆஸ்பத்திரிகளின் வாசலில் அழுத்தமாய் அழுதுகொண்டிருக்கிறது.அவரின் கோவிட் நம்பர்கள் தவறு என்பதை, தினம் அனுமதிக்கப்படும் கோவிட் பேஷன்டுகளின் கூட்டல் எளிதாய் சொல்லிவிட்டது. வெளியில், வரிசையில், ஆம்புலன்ஸில், ஸ்ட்ரெச்சரில், இப்படி பலருக்கும், பெட்டும், மருத்துவ கண்காணிப்பும் கிடைக்கவே இல்லை. இதில் கொடுமை, ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடில்லாமல் சீன கோவிட், சீன கம்யூனிசமாய் அழித்துக்கொண்டு இருக்கறது. இதை நான் பெரிதாகவோ, நாடக பாணியிலோ சொல்லவில்லை. மொத்தமாய் ஒரு நிர்வாக கோளாறில் தில்லி சீரழிகிறது.

ஐந்து வருடம் போல் இப்போது மோதியை குற்றம் சொல்ல முடியவில்லை. அதனால், இப்போது அவரின் பார்வை, ஆஸ்பத்திரிகளின் மேலும், வெளியாட்கள் எனப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீது திரும்பி இருக்கிறது. ப்ரின்ட் மோதிமீது குற்றம் சொல் என அவரின் வாய்க்குள் மைக்கை திணிக்கிறது.தனியார் மருத்தவமனைகள், உத்தம புருஷர்களில்லை. ஆனால், அவர்களை இப்போது கண்டபடி பகைத்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம். அதைவிட ட்ரஸ்ட் நடத்தும் கங்கா ராம் ஆஸ்பத்திரியை முட்டாள்தனமாய் பகைத்துக்கொண்டதும், படித்த முட்டாளாய் அந்த ஆளை காட்டுகிறது.

அதைவிட, தனியார் லேப்களை, டெஸ்ட் பண்ணகூடாது என்றும் தடுத்திருப்பதில், உண்மை நிலவரம் வராமல் பார்த்துக்கொண்டிருப்பதில் எத்தனாக இருந்தாலும், எமன் வந்து பலரும் காலியாவதில், சுருக்கு மட்டும் இவர் ஆட்சிக்கு வரலாம் என்று மனம் எண்ணுகிறது..

ஏற்கெனவே லாக்டவுனை உபயோகப்படுத்தாமல், எந்தவித புது இடங்களிலும் ஆஸ்பத்திரிகளை, படுக்கைகளை, உதவி மையங்களை ஏற்படுத்தாமல், தடுமாறியதில் மக்கள் மரணகாண்டில் இருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன், ஹெல்த் என்பது ஸ்டேட் சப்ஜக்ட். மத்திய அரசு கை காட்டும், பணம் தரும், கண்காணிக்கும் கேள்வி கேட்கும். சென்னை தாம்பரத்தில்போல் ராணுவத்தை வைத்தும் ஆஸ்பத்திரி கட்டமைப்பு நடக்கும். ஆனால், தெருக்கு தெரு.. இதை தயார் பண்ணவேண்டியது, ஆக்ஸிஜன் மத்திய அரசு தந்தாலும் அதை கொண்டு வர ரெடி பண்ண வேண்டியது மாநில அரசுகள் தான்.

சாவுகளில் இரண்டில் ஒன்றையும், ஒரு நாளைக்கு பத்து பேருக்குத்தான் டெஸ்ட் பண்ணலாம் என்கிறமாதிரியான உத்தரவுகள், மிக கேவலமானவை. உடனே குஜராத், உபி என்று உருட்டாதீர்கள்.. ஒவ்வொன்றாய் வருகிறேன். டெஸ்ட் பண்ண முடியவில்லை, மருந்தில்லை, ஆக்ஸிஜன் தாய்லாந்தில் இருந்து வருகிறது நாளை என்பதெல்லாம்..

தில்லி ட்ரைவர் கேஜூ தூங்குகிறார் என்பதை மட்டுமே குறிக்கிறது.இதில், நீதிபதிகளுக்கு நட்சத்திர ஆஸ்பத்திரி என்பதெல்லாம் உச்சகட்ட எரிச்சலான சமாச்சாரம். கடுப்பில் இருந்த நீதிமன்றம், உருப்படியாய் எதுவும் செய்யாமல், எங்களை காக்காய் பிடிக்கிறியா என்று கேட்டு, கவ்வ கொடுத்து இன்னொன்றை வைத்து விளாசி விட்டது.இதில் உ பி, குஜராத் என்று மட்டும் உருட்டும் நடுநிலைகளை கண்டால்.. வேண்டாம் விடுங்கள்.கண்டிப்பாய் பகிருங்கள்.

Exit mobile version