தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால், அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது. திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது மேலும் போக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் குறித்து பேசியது தான். மேலும் அண்ணாமலை கூறிய பிறகுபோக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு ஊழல் தடுக்கப்ட்டது.
அதன் பின் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் (டிடிபிஎஸ்) ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று INR 29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. ஏன் பதில் சொல்லுங்கள் பாலாஜி என மின்வாரியத்தில் நடைபெற்ற கமிஷன் ஊழலை வெளிகொண்டுவந்தார் அண்ணாமலை
அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பதில் இல்லை. அதின் பின் அண்ணாமலை மேலும் ஒரு ட்வீட் செய்தார் அதில் கோபாலபுரம்-பிஜிஆர் எனர்ஜி -மின்சார அமைச்சகம் -செந்தில் பாலாஜி இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்..விடை எளிதில் புரியும் ! என ஒரு ட்வீட் செய்தார்.
திமுக அரசு மீது ஊழல் குற்றசாட்டு வைத்த அண்ணாமலை வழக்கு போடுங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார், திமுக அரசு அல்லது செந்தில் பாலாஜி வழக்கு தொடர்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் திமுகவினரோ பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்தினை வைத்து வழக்கு தொடர்ந்துள்ளார்கள்அதற்க்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் ‘நோட்டீஸ்’ கொடுக்கின்றனர்.
இது குறித்து அண்ணாமலை கூறுகையில் : தி.மு.க. அரசின் மின் கொள்முதல் முறைகேடு என சொன்னேன்.இப்படித் தான் மின் துறை போக்குவரத்துத் துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல் நடக்கிறது. எல்லா விபரங்களையும் திரட்டி வைத்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டு வரப் போகிறேன். உண்மையைச் சொன்னால் உடனே ‘மானநஷ்ட வழக்கு போடுவேன்; 500 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் ‘நோட்டீஸ்’ கொடுக்கின்றனர்.
அதற்கெல்லாம் இந்த அண்ணாமலை பயப்படுவேனா.நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் என் மீது வழக்குப் போடட்டும். என்னவெல்லாம் சொல்கிறேனோ அத்தனைக்குமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.இப்படி மிரட்டுவதால் பயந்து ஓடுவதற்கும் ஒதுங்குவதற்கும் அண்ணாமலை தி.மு.க. தலைவர்கள் வீட்டு வேலை ஆள் அல்ல. மத்தியிலும் 17 மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் மாபெரும் இயக்கத்தின் மாநில தலைவன்.தி.மு.க. ஊழலை அவ்வப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்கவே பாடுபடுகிறேன்.
இதுவும் பிரதான மக்கள் பணி தான்.வழக்கு போடுவதாக கூறி தி.மு.க. என்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.