கொடைக்கானல் ஊட்டி போறீங்களா.. அப்போ இத நீங்க தான் முதல்ல படிக்கணும்! இ பாஸ் வாங்க இணையதள முகவரி!

kodaikanal ooty epass

kodaikanal ooty epass

கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால், சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் 3 முதல் நான்கு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகையை தற்போது வரை முறைப்படுத்தாமல் இருந்து வந்துள்ளது அதிக கூட்டம் வந்தால் சமாளிக்க முடியாமல் திணறவும் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். இதனை முறைப்படுத்தும் நோக்கில், அவர்களின் விபரங்கள், வருகை, புறப்பாடு, வாகன எண், தங்குமிடம் உள்ளிட்டவற்றை அடையாளப்படுத்தி, இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ‌-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.

மேலும், இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் ‘epass.tnega.org’ என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து மே 6, 2024 (திங்கள்கிழமை) காலை 6.00 மணி முதல் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.

Exit mobile version