ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளனர்-எச்.ராஜா குற்றச்சாட்டு

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். திருவேங்கடம் என்கவுன்டர் ஏன்? என தமிழக பா.ஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.+

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், எச்.ராஜா கூறியதாவது: உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. திண்ணைப்பள்ளியில் எல்லோருக்கும் பொதுவாகவும், தானமாகவும் கல்வி கிடைத்தது; இது தான் சனாதன பாரம்பரியம். சனாதானத்தை பற்றி எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

ஆம்ஸ்ட்ரக் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேடத்தை கொலை செய்தது ஏன்?. ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பகட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என அவர் பேசினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version