இந்திய எல்லையில் சீன ராணுவத்துடன் போரிட்டு வீர மரணமடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி நினைவிடத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி40, இந்திய ராணுவத்தில் கடந்த 23ஆண்டகளாக பணியாற்றி வருகிறார்.
தற்போது ஹவில்தார் பொறுப்பில் உள்ள பழனி இந்திய எல்லை அருகே லடாக்கில் உள்ள லே பகுதியில் சீன ராணுவத்துடன் நடைபெற்ற போரில் வீர மரணமடைந்தார்.
பழனி உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு சொந்த ஊரான கடுக்களூருக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.முப்படை தளபதிகள், கலெக்டர், காவல்துறையினர், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பழனி உடலுக்கு மரியாதை செலுத்தி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிஜேபி தேசிய தலைவர் எச். ராஜா வீரமரணம அடைந்த ராணுவ வீரர் பழனி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பழனியின் தந்தை காளிமுத்து, மனைவி வானதிதேவி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மாநில துணைத் தலைவர் குப்புராம், மாவட்ட தலைவர் முரளிதரன், ஆத்ம கார்த்தி மற்றும் பிஜேபி கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர் குட்லக் ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.