டைம்ஸ் ஆப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது அதன் தமிழாக்கம்
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த கூட்டு தகவல் தொடர்பு இயக்குனர் விகாஸ் தேஷ்பாண்டே கூறியுள்ளதாவது : பொதுவாக நெருக்கடி காலங்களில் மக்களுக்கு உதவி செய்வது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மரபாகும்.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லும் நிலையில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்களும் அதற்கு ஈடாக தங்கள் நிவாரண பணியை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் அதிகரித்தாலும் உள்ளூர் சமூகத்திற்கு உதவ போதுமான திறன் எங்களிடம் உள்ளது.
சேவா இன்டர்நேஷனல் தலைமையிலான முயற்சிகளில் 200 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் மற்றும் பல அமெரிக்க தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து கொரோனா நிவாரண உதவியை செய்து வருகிறது.
மேலும் பல அமைப்புகளை சேர்ந்த 2500 தன்னார்வளர்கள் ஒன்றிணைந்து கொரோனா நிவாரண உதவியை செய்து வருகிறார்கள். சேவா இன்டர்நேஷனல் 50 மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவை ஒன்றிணைத்து, துன்பத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும், ஆயிரக்கணக்கான முகமூடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது.
கொரோனவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு மற்றும் மளிகை சாமான்களை வழங்கி உள்ளது. மேலும் ஆர்எஸ்ஸ் ஸ்வயம் சேவகர்களுடன் இணைந்து 75 அமைப்புகளும் ஒன்றிணைந்து கொரோனா நிவாரண உதவியை செய்து வருகிறது