ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகியநாங்கள் முதன்முறையாக இன்று "குவாட்" மாநாட்டிற்காக நேரில் கூடினோம். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்களது கூட்டாண்மை, பாதுகாப்பு, மற்றும் செழிப்புக்கு அடித்தளமாக இருக்கும் ஒரு பிராந்தியத்திற்கு – சுதந்திரமான வெளிப்படையான இந்தோ –பசிபிக்கை உள்ளடக்கியது என்பதை மீண்டும் ஒப்புக்கொள்கிறோம். எங்கள் கடைசி சந்திப்பு நடந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. மார்ச் முதல், COVID19 தொற்றுநோய் தொடர்ந்து உலகளாவிய துன்பத்தை ஏற்படுத்தியது; காலநிலை நெருக்கடியை முடுக்கிவிட்டது; ...