பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – கொலை மிரட்டல் விடுத்த இ-மெயில் உண்மை முகவரியை கண்டுபிடித்த NIA

பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்ககு போடப்பட்ட சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பானது பிரதமர் மோடியை கொலை மிரட்டல் விடுக்கும் இமெயில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்துள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரி குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது . உள்துறை அமைச்சகமும் எஸ்.பி.ஜி.க்கு தகவல் அளித்துள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள குறிப்பின் அடிப்படையில் இந்த மின்னஞ்சலை ylalwani12345@gmail.com என்ற இ-மெயில் கணக்கிலிருந்து info.mum.nia@gov.in என்ற இ-மெயிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது ஆகஸ்ட் 8, 2020 சனிக்கிழமை அன்று அனுப்பப்பட்ட மின் அஞ்சல் ஆகும். இந்த மின் அஞ்சல் அனுப்பப்பட்ட நேரம் 1:34:06. அதில் அனுப்பப்பட்ட விவரங்கள் பார்க்கும் போது பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் போடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மின் அஞ்சல் வெளிவந்த பிறகு, பிரதமரின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக உள்ளன. மேலும் புலனாய்வுப் பணியகம் என்ஐஏ ரா பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் இந்த மின்னஞ்சல் குறித்து விசாரணை செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இமெயில் வந்ததையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பிரதமரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் இன்று இந்த மெயில் வந்திருப்பது திட்டமிட்ட செயல்களா என உளவுத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இமெயில் வந்ததையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பிரதமரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் இன்று இந்த மெயில் வந்திருப்பது திட்டமிட்ட செயல்களா என உளவுத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்
Exit mobile version