அகமதாபாத் விமான நிலையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்டீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் நடுங்க வைத்தது. இந்த விமானத்தில் சுமார் 242 பேர் பயணம் செய்துள்ளனர். ஆனால் இந்த விபத்தில் இருந்து ஒருவரால் மட்டுமே உயிர்தப்பிக்க முடிந்துள்ளது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை செய்து வருகிறார்கள்
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஜோதிடர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என்று பதிவிட்டிருந்தார். தற்போது அவரது அந்த பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜோதிடரின் பெயர் ஷர்மிஸ்தா.
இவர் கடந்த ஜூன் 05 ஆம் தேதி 2025-ல் விமான விபத்து நிச்சயம் ஏற்படும் என்று கணித்து கூறியிருந்தார். அதற்கேற்ப ஜூன் 12 ஆம் தேதி, அதாவது இன்று அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த விமான விபத்து கடந்த 25 ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளில் மிகவும் மோசமான விமான விபத்தாக கருதப்படுகிறது. ஜோதிடர் ஷர்மிஸ்தாவின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஜோதிடர் ஷர்மிஸ்தா இந்த விமான விபத்து பற்றி மட்டுமின்றி, பங்குச் சந்தை, நாட்டில் நடக்கக்கூடிய சில முக்கியமான மாற்றங்கள், பொருளாதார ரீதியான வீழ்ச்சி வளர்ச்சி, தங்கம் வெள்ளி நிலவரம் குறித்த பல விஷயங்களைப் பற்றியும் தனது எக்ஸ் தளத்தில் கணிப்புக்களை பதிவிட்டு வருகிறார். இவரது கணிப்புப்படி, 2025-ல் விமானத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், அதே வேளையில் பெரிய விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கணித்திருந்தார். அதுவும் இவையெல்லாம் குரு பகவான் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் போது நடக்கும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் இவர் டாடா குழுமம் ஹைதராபாத்தில் ரஃபேல் ஜெட் விமானத்தின் கட்டமைப்பை உருவாக்கும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளால் வின்வெளி சுற்றுலா மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ உலகையே ஆச்சரியப்படுத்தும் என்றும் கணித்து குறிப்பிட்டிருந்தார். முக்கியமாக விமான விபத்து பற்றிய தனது கணிப்பில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வளவு துல்லியமாக யாராவது கணிக்க முடியுமா என்று பலரும் இவரது கணிப்பை கண்டு வியந்துள்ளனர். மேலும் இவர் வேறு என்ன விஷயங்களை எல்லாம் கணித்துள்ளார் என்று இவரது பக்கத்தை பலரும் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இதைப் போல் தமிழக ஜோதிடர் ஷெல்வி அவர்களின் வீடியோவும் வைரலாகி வருகிறது. அவரும் இந்தியாவில் மிக பெரும்விமான விபத்து நடக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.