சென்னை விமான நிலையத்தில் கலில் ரகுமான் இடம் இருந்தது ரூ.23.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.23.6 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்தத் தகவலையடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர். துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பயணி இருக்கை ஒன்றுக்கு அருகில் விமானத்தின் பக்கவாட்டு பகுதியில் 406 கிராம் எடையில் தங்கப் பசை பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து 309 கிராம் சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.15.72 லட்சம்.

அதே விமானத்தில் வந்த திரு கலில் ரகுமான் (49) என்ற பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், 176 கிராம் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. இதிலிருந்து 154 கிராம் சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.7.84 லட்சம். 

கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் எடை  463. இதன் மதிப்பு ரூ. 23.6 லட்சம் என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version