விடுதலை சிறுத்தை கட்சியினர் அராஜகம் நியாயம் கேட்ட யூ – ட்யூபர் மீது தாக்குதல்…

ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், சனாதன இந்து தர்மத்தை ஒழித்துக் கட்ட வேண்டும், விரட்ட வேண்டும் என்றும் பேசி வருகிறார். மேலும் சில நாட்களுக்கு முன்பு‌ நீண்டு கூம்பு வடிவத்தில் இருந்தால் அது மசூதி என்றும், உயரமாக‌ நேராக இருந்தால் அது சர்ச் என்றும், மேலே பார்த்தால் ஆபாசமான அருவருக்கத்தக்க சிலைகள் இருந்தால் இந்து கோவில்கள்‌ என்றும் கூறினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனி கோவிலுக்கு திருமாவளவன் சென்று வந்தார். இது குறித்து தேனி சின்னமனூர் சேர்ந்த அருண்குமார் என்ற youtuber இந்து கோவிலை பற்றி ஆபாசமாக பேசிவிட்டு திருமாவளவன் அவர்கள் எப்படி பழனி கோவிலுக்கு செல்லலாம்..? இதே போல் சர்ச்சையோ, மசூதியோ பேச முடியுமா..? என்று கேட்டு தனது யூடுயூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதைக் கண்ட விசிகவினர் வீடியோ வெளியிட்டவர் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது கருத்துக்களை நியாயமான முறையில் பதிவிட்ட youtuber அருண்குமாரை மிகவும் ஆபாசமான கொச்சையான வார்த்தைகளாலும் பேசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version