இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய சில சர்ச்சை கருத்துகளே இந்த மோதலுக்கு காரணமாகும்.பிரதமர் மோடி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய சில புகைப்படங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டி படைத்துள்ளது. மாலத்தீவின் பொருளாதாரமே முடங்கியது முடங்கியது என்றே என்றே கூறலாம் கூறலாம். அதற்கு காரணம் மாலத்தீவு அமைச்சர்களின் இனவெறி பதிவே.
தெற்காசிய நாடான மாலத்தீவுகள் அதிபராக, மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு சமீபத்தில் பொறுப்பேற்றார். சீன ஆதரவாளரான இவர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் துவங்கினார்.கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,கடந்த நவம்பர் மாதம் இந்தியா தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார் மலேசிய அதிபர் முகமது முய்சு
இந்தநிலையில் பிரதமர் மோடி, தனது லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு ”லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்” என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பிரதமர் மோடி லட்சத்தீவில் எடுத்த அழகிய படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினார் அதனை தொடர்ந்து லட்சத்தீவை பற்றி அறிந்து கொள்ள உலக மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். கூகிளில் அதிகம் தேடப்பட்ட நகரங்களில் லட்சத்தீவு முதலிடம் பிடித்தது.
இதை தாங்கி கொள்ள முடியாத மாலதீவு அமைச்சர்கள் பிரதமரின் லட்சத்தீவின் சுற்றுப்பயணம் தொடர்பாக மோடிக்கு எதிராக அவர்களின் கருத்துக்களை சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார்கள். குறிப்பாக, இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், குப்பைகள் நிறைந்தது எனவும் இனவெறி சம்பந்தமாகவும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இது இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது . இதனால், பலரும் மாலத்தீவுக்கு எதிரான பிரச்சாரங்களைச் சமூக வலைதளங்களில் முன்வைத்தனர். மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவைக் குறிப்பிட்டனர்.10,500 ஹோட்டல் முன்பதிவுகளும், 5,520 விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன ஆன்லைன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும், ‘ஈஸ் மை டிரிப்’ என்ற இணையதளம், மாலத்தீவுகள் விமான டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைத்தது.லட்சத்தீவுகளுக்கான விமான டிக்கெட் முன்பதிவுக்கு முக்கியத்துவம் தர துவங்கியது.
மேலும் #BoycottMaldives என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இந்த நிலையில் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்தது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய சுற்றுலா பயணியரை நம்பியே மாலத்தீவு சுற்றுலாத்துறை இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதன் பொருளாதாரம் மொத்தமாக முடங்கியுள்ளது.
இந்த நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பிரதமர் மோடியுடனான உறவுகள் சீர்குலைந்ததையடுத்து, மாலத்தீவு பெரும் நெருக்கடியில் உள்ளது. இன்று மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் தங்களது நாடு திவாலாகிவிட்டதாக அறிவித்து, பிணை எடுப்பு (Bailout) கோரியுள்ளது.
இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.