தேசியக்கொடி காவியாக மாறலாம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்

கர்நாடகா கல்லூரி ஒன்றில் இஸ்லாமியப் பெண்கள் சீருடை அணியாமல் திடீரென்று ஹிஜாப் அணிந்து வந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பள்ளி நிர்வாகம். சீருடை அணிந்து வாருங்கள் என கூறினார்கள் இது பிரச்சனையாக வெடித்தது. இதன் காரணமாக போராட்டங்கள் வெடித்தது. இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிந்து வந்ததால் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தார்கள்.

இந்த நிலையில் கா்நாடகத்தில் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி பிப்.5-ஆம்தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிா்த்து உடுப்பி அரசு மகளிா் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்திருந்த மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு, பிப்.10-ஆம் தேதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட எதையும் அணிந்து வரை தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணி விதித்த தடை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்
கடந்த காலங்களில் காவிக்கொடியை தேசியக்கொடியாக மாற்றுவதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால் யாருக்குத் தெரியும்? ஒருநாள் காவிக்கொடி, நமது தேசியக்கொடியாக மாறக்கூடும். மூவர்ணக்கொடிக்கு முன், பிரிட்டிஷ் கொடியும், அதில் நிலவு சின்னத்துடன்கூடிய பச்சைக் கொடியும்தானே இருந்தன! அதை மாற்றித்தானே இந்த மூவர்ணக்கொடியைக் கொண்டு வந்தோம். எனவே, இந்து சமாஜம் ஒன்று சேர்ந்தால் தேசியக்கொடியை மாற்ற முடியும்” என்று பேசினார்.

Exit mobile version