சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
தற்கொலைபடை கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில் அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 28 ல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் காடுத்த ஷாகீர் பசீர் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடந்தது.
இதனை தொடர்ந்தது மேலும் இருவர் கைது செய்யபட்டுள்ளனர் பீர் தாரிக் மற்றும் இன்ஷா என்பவர்கள் கள் தங்கள் வீட்டில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















