பீகார் தேர்தலின் பெரும்பாலான எக்சிட் போல்கள் நிதிஷ்குமார் அவுட் என்றே கூறுகின்றன. நிதிஷ் குமாரும் அதை உணர்ந்தே இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி விட்டார். பிஜேபி எதிர் பார்த்ததும் இதைத்தான் .
நிச்சயமாக பீகார் தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட இருக்கிறது. அது யார் தலைமையில் ஆட்சி? எந்த கூட்டணியின் ஆட்சி என்பதற்கான விடைகள் தா ன் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு
தெரிய வரும்.
இப்பொழுது உள்ள நிலையில் ஒரு கட்சிக்கான ஆட்சிக்கு நிச்சயமாக வாய்ப்புகள் இல்லை. பிஜேபி கூட்டணியோ இல்லை ஆர்ஜேடி கூட்டணியோ எந்த கூட்டணி
வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு இடையில் மிக அதிக அளவில் தொகுதி வித்தியாசம் இருக்க போவதில்லை.
எந்த கட்சி தனிப்பெரும் கட்சியாக வருகிறதோ அந்த கட்சியின் தலைமையில்தான் அடுத்து வரும் பீகார் ஆட்சி அமைய
இருக்கிறது.பீகாரில் பிஜேபி ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டிரிய ஜனதா தளம் இந்த மூன்று கட்சிகளும் சமபலத்தில் இருந்தாலும் வாக்கு வங்கி அடிப்படையில் பிஜேபிக்கு தான் 1ம் இடம்
ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 2வது இட ம் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 3 வது இடம்.இந்த அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் இருக்கலாம் இருக்கும் என்கிற அடிப்படையில் அடுத்து வரும் ஆட்சி யாருடையதாக இருக்கும் என்று பார்ப்போம்.
இந்த இடத்தில் ஒன்றை யோசித்து பார்க்க வேண்டும். கடந்த 2014 லோக் சபா தேர்தலில் பிஜேபிக்கும் நிதிஷ்குமார்க்கும் இடையே இருந்த கூட்டணி உடைந்ததால் பீகாரில் நீண்ட நாட்களுக்கு பிறகு
மும்முனை போட்டி நடைபெற்றது.
அதாவது பிஜேபி லோக்ஜன சக்தி ஆர் எஸ்எல்பி ஒரு கூட்டணி ஆர்ஜேடி காங்கிரஸ் ஒரு கூட்டணி நிதிஷ்குமார் ஒரு கூட்டணி என்று மும்முனை போட்டி நடை
பெற்றது. அதில் பிஜேபி கூட்டணிக்கு 31 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது பிஜேபி-2,2 லோக்ஜன சக்தி-6 ஐஆர்எஸ்
எல்பி-3 என்று பிஜேபி கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது.
நிதிஷ்குமார் பிஜேபி கூட்டணிக்கு வந்து 17 வருட தேர்தல் அரசியலில் அவர் இல்லாமல் தனியாக போட்டியிட்டு பிஜேபி தன்னுடைய வலிமை என்ன என்று பீகாரில் உணர்ந்த முதல் தேர்தல் 2014 லோக்சபா தேர்தல் தான்.முதல் தேர்தலிலேயே தன்னுடைய வலிமையை பிஜேபி உணர்ந்து கொண்டது.
ஆர்ஜேடி காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு,ஆர்ஜேடிக்கு 4 காங்கி
ரஸ் கட்சிக்கு 4 தேசிய வாதகாங்கிரஸ் கட்சிக்கு 1 என்று 7 தொகுதிகளும் நிதிஷ்குமார்க்கு 2 தொகுதிகளும் கிடைத்தது.
நிதிஷ்குமார் தன்னுடைய வலிமையை முதலில் உணர்ந்த தேர்தல் அது தான்.
பீகாரில் தன்னை தன்னிகரற்ற தலைவராக நினைத்து வலம் வந்து கொண்டு இருந்த நிதிஷ்குமார்க்கு பீகாரில் 3 வது இடம் தான் என்று உணர்த்தியதும் அந்த
தேர்தல் தான்.
அதனால் தான் பிஜேபியை வீழ்த்த தன்னுடைய பரம விரோதியான லாலுவுடன் கை கோர்த்து காங்கிரஸ் துணையுடன்
2015 சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை தோற்கடித்து 2014 லோக்சபா தேர்தலில் தன்னை தோற்கடித்த பிஜேபியை பழி
தீர்த்துக் கொண்டார்.
பிஜேபி கூட்டணியில் 17 வருடம் இருந்து மத்திய அமைச்சர் பீகார் முதல்வர் என்று அனுபவித்த நிதிஷ் பிஜேபியை பீகாரில் ஒழிக்க தன்னுடைய பரம விரோ தியான லாலுவுடன் கைகோர்த்து 2015 தேர்தலில் களம் கண்ட பொழுதே நிதிஷ்க்கு போட்டியாக நித்தியானந்த ராயை வளர்க்க ஆரம்பித்தது.
நித்தியானந்த ராய் இப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கிறார்.
நித்தியானந்த ராய் கிரிராஜ் சிங்.
மாதிரி சர்ச்சைகளுக்கு உள்ளாகும் அரசியல் வாதி அல்ல. தேவேந்திரர் பட்னாவிஸ் மாதிரி ஒரு அறிவு ஜீவியான அரசியல் வாதி.
பீகார் அரசியலை தீர்மானிக்கும் யாதவ சமுதாயத்தில் இருந்து வந்தவர். அதனால் பீகார் அரசியலை தன்னுடைய ஆளு மைக்கு கொண்டு வர பிஜேபி வைத்து இருக்கும் துருப்பு சீட்டு நித்யானந்த ராய் தான்.
இந்த இடத்தில் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். நிதிஷ்குமார் லாலு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் வரை நமக்கு பீகாரில் மட்டுமல்ல மத்திய ஆட்சிக்கே டேஞ்சர் என உணர்ந்த பிஜேபி நிதிஷ்க்கு நூல் விட்டுக்கொண்டு இருந்தது.
இன்னொரு விசயம் தெரியுமா? நிதிஷ்குமார் மட்டும் லாலு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இருந்தால் 2019 லோக் சபா
தேர்தலில் மோடிக்கு எதிராக அவர் தான் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருந்து இருப்பார்.2019 தேர்தல் களம் கூட மாறி இருக்கும்.
இதனால் தான் பிஜேபி நிதிஷுடன் மீண்டும் கை கோர்க்க இறங்கி வந்தது.நிதி ஷ் உடனே அதை பற்றிக்கொண்டார்.ஏனெனில் தன்னுடைய அரசியல் அனுபவம் கூட வயதாக இல்லாத லாலு மகன்க ளின் ஆணவ அரசியலுக்கு கட்டுப்பட்டு இருக்க நிதிஷ் குமார் ஈகோ விரும்பாத தால் மீண்டும் பிஜேபி கூட்டணிக்கு வந்து விட்டார்.
ஆக நிதிஷ்க்கு இனி பிஜேபியை விட வேறு போக்கிடம் கிடையாது என்கிற நிலையை நிதிஷ்க்கு பிஜேபி உருவாக்கிவிட்டது.அதே நேரத்தில் நிதிஷ்குமார் இருக்கும் வரை பிஜேபி தலைமையில்
பீகாரில் ஆட்சி அமைய வாய்ப்புகள் இல்லை.
இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த பிஜேபி இந்த சட்டமன்ற தேர்தலை சரியாக பயன் படுத்தி கொண்டது.பிஜேபி நினைத்து இருந்தால்லோக்ஜன சக்தியை கூட்டணிக்கு கொண்டு வந்து இருக்க முடியும்.
பீகாரில் ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதை மதுரையில் இரு க்கும் நானே அறியும் பொழுது டெல்லியி ல் இருக்கும் மோடி அமித்ஷா அறிய மாட்டார்களா..
லோக்ஜன சக்தி கூட்டணி யை விட்டு வெளியேறினால் அதனால்
பிஜேபி கூட்டணி யின் வெற்றி பாதிக்கும் என்று அறிய மாட்டார்களா..
அறிவார்கள்.இருந்தாலும் இப்பொழுது தேர்தலை நடத்தினால் நிதிஷ்குமார் வீழ்வார்.
அதனால் அவர் அரசியலை வி
ட்டே விலகுவார் அந்த இடத்திற்கு பிஜேபி வந்து விடலாம் என்பதற்கு தான் சிராக் பஸ்வானை வைத்து பிஜேபி வேட்பாளர்களுக்கு ஆதரவு நிதிஷ்குமார் வேட்பாள ர்களுக்கு போட்டிஎன்கிற விசித்திரமான
கூட்டணியை உருவாக்கியது பிஜேபி.
பிஜேபியின் நோக்கம் இந்த தேர்தலில் நிதிஷை பலம் இழக்க வைத்து பீகார் அரசியலில் இருந்து ஓரம் கட்டுவது தான்
பிஜேபி ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பிஜேபி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் நிதிஷ்குமாரே பிஜேபிக்கு
முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துvவிட்டு அரசியலில் இருந்து விலகி விடுவார்.
இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இரு க்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை உருவா னால் பிஜேபியின் நித்தியானந்த ராய் தான் அடுத்த பீகார் முதல்வர் என்று உறு தியாக நம்பலாம்.இன்னொரு விசயமும்
நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.
அது என்னவென்றால் நிதிஷ்குமார் சிராக் பஸ்வானை வைத்து தனக்கு தண்ணி
காட்டிய பிஜேபிக்கு பாடம் கற்பிக்க மீண்டும் நிதிஷ்குமார் ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்கலாம்
ஆனால் அப்படி நடந்தால் நிதிஷ் கட்சி பிஜேபிக்கு ஆதரவாக உடையவும் வாய்ப்புகள் இருப்பதால் நிதிஷ்குமார் பிஜேபி
தலைமையில் ஆட்சி அமைய வழி விட்டு ஒதுங்கி விடுவார்.
ஒரு வேளை ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து விட்டால் பிஜேபி இப்போதைக்கு
அமைதியாகி விடும்.
தேஜஸ்வி யாதவ் முதல்வராகி விடுவார்.ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும்
குறைவு என்பதால் பீகாரில் பிஜேபி தலைமையில் ஆட்சி அமையவே நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது பீகா ரில் நிதிஷ்குமார் சகாப்தம் முடிந்து நித்தி யானந்த ராய் யாதவின் சகாப்தம் ஆரம்ப
மாகிறது…
கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.