ராஜ்யசபாநாடாளுமன்ற உறுப்பினர்க்களின் மொத்த எண்ணிக்கை 245. அதில், தற்போது ஜம்மு – காஷ்மீரில் இருந்து நான்கு இடங்கள், நியமன எம்.பிக்களுக்கான நான்கு இடங்கள் என மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன.
இதனால் ராஜ்யசபாவின் தற்போதைய பலம் 237 ஆகவும், மெஜாரிட்டிக்கான எண்ணிக்கை 119 ஆகவும் உள்ளது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் காலியான 12 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் செப்.,3ல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் நேற்று போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
அதில் ஒன்பது பேர் பா.ஜ.,வினர், 2 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள ஒருவர் காங்கிரசின் அபிஷேக் மனு சிங்வி.
தற்போது வெற்றி பெற்ற 11 எம்.பி.,க்களால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 112 ஆக உயர்ந்துள்ளது.
விரைவில் மெஜாரிட்டியை எட்ட உள்ளதால், புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது பிரதமர் மோடியின் அரசுக்கு எளிதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.