விரைவில் மக்களவை தேர்தல் தேதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும். இந்த நிலையில் மக்களவை தேர்தலை சந்திக்க அணைத்து தேசிய மாநில அளவிலான கட்சிகள் தயாராகி வருகிறது. மேலும் தேர்தல் ரேஸில் ஆளும் பாஜகவே முன்னணியில் உள்ளது. 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி அவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது பல மக்கள் நலத்திட்டங்களையும் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
தமிழகத்தில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முழுமையாக முடிந்த நிலையில் அதிமுக கூட்டணியில் சிறு கட்சிகள் கூட இணைய யோசித்து வரும் நிலையில்,பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தேவநாதன் யாதவியின் கட்சி உள்ளிட்டவை பாஜக கூட்டணியில் உள்ளது. மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து பேசிவருகிறார். பாஜக கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் அதிமுகவின் பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி,அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டபொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தமிழகத்தில் தனியாக போட்டியிட்டது அந்த தேர்தலில் திமுக அதிக இடங்களை பெற்றது இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பரவலாக ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாக்குகள் வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற்று மூன்றாம் இடம் பெற்றது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து தென்தமிழகம் பகுதியில் தினகரன் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா உள்ளவர்களுக்கு சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறைகளும் செல்வாக்கு உள்ளதால் அந்த இடங்களில் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் விடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, அவர்கள் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த அமைப்புகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் தற்போது அரசியலில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த பெரிய தலைவர்கள் இல்லாத காரணத்தால் பா.ஜ.கவுடன் தினகரன் மற்றும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது. மேலும் மூன்றாவது முறையும் மத்தியில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. வரும் அமைச்சரவையில் முக்குலத்தோர் சார்ந்தவர் ஒருவர் அமைச்சராவர் என டெல்லியும் உறுதி கொடுத்துள்ளது.
இதன் காரணமாகவே முக்குலத்தோர் சமூகம் இந்த முறை பா.ஜ.கவிற்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளார்கள் மேலும் தென் தமிழகத்தில் இந்த முறை அந்த பகுதிகளில் அதிமுக மூன்றாம் இடம் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ள போயிட்டு இருக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது