பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் ஜெட் வேகத்தில் பறக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. 267 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைப்பதோடு, ஏற்கெனவே முடிவுற்ற பல திட்டங்களையும் திறந்து வைத்து வருகிறார்.மேலும் கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு பம்பராமாய் சுழன்று வருகிறார். கடந்த முறையை விட இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முக்கியமாக தமிழகம் கேரளம் ஆந்திரா தெலுங்கானா தென் மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி அடையவேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் பிரதமர் மோடி அதன் காரணமாகவே தென் மாநிலங்களில் அதிகப்படியான சுற்று பயணங்களை மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. அதற்கேற்றாற் போல் தாள் பாஜகவுக்கு சாதகமாக தான் களமும் உள்ளது என்பதால் பிரதமர் மோடிக்கு உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் காவி கொடி பறக்க தயாராகிவிட்டது. தேர்தலுக்கு முன்பே கூட்டணி விஷயத்தில் அண்ணாமலை எடப்பாடியை வீழ்த்தி வெற்றி பெற்றும் இருக்கிறார் பாஜக தலைமையில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். அதுமட்டுமிலலாமல் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்திய பாமக தேமுதிக கட்சிகள் தற்போது பாஜகவுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவாக்கும் கூட்டணிகளை பார்த்து கதற ஆரம்பித்து விட்டார்கள் கழகங்கள்.
திமுக கூட்டணியை உடைக்க முடியவில்லை என்பதை விட திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டதால் அதன் கூட்டணி கட்சிகளை தக்கவைத்து கொண்டது. முதலில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தன போட்டியிடும் 30 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடும் என கூறிவந்த திமுக தமிழகத்தில் பாஜகவின் அசுர வளர்ச்சியையும் அதிமுக தனியாக சென்றதும் திமுகவை கலங்கடிக்க வைத்தது.
திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஆப்சன் இருக்கிறது என தெரிந்து கொண்டு வெறும் 21 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக களம் காண்கிறது திமுக. அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகள் அவரவர் சின்னத்தில் போட்டியிடலாம் எனவும் கூறி கூட்டணி கட்சிகளை தக்கவைத்து கொண்டது.
இந்நிலையில் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. ராமதாஸ், அதிமுக கூட்டணியையும் ; அன்புமணி, பாஜக கூட்டணியையும் விரும்புகிறார்கள் என செய்திகள் பரவியது
கடந்த 2 வாரமாக அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தி வந்த விஜயகாந்த் துவக்கிய தே.மு.தி.க., பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கு இன்னும் அதிக வாய்ப்புக்கள் உள்ளது. என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிரேமலதா என்ன வெளியில் என்ன சொன்னாலும் திரைமறைவாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கிறது. பாஜக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
டெல்லி சென்றுள்ள அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.பாஜகவின் தலைவர்கள்; அதன்பின் விகே சிங், கிஷன் ரெட்டி ஆகிய இரண்டு தலைவர்கள் நேரடியாக அன்புமணியை சந்தித்து பேசி உள்ளனர்.அன்புமணி பாஜகவிடம் 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 5 லோக்சபா சீட் என்று பாமக கேட்டுள்ளதாம்.
இதையடுத்து பாமக இறங்கி வந்து 7 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 7 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் தான் பாஜகவின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல் வேட்பாளர் பட்டியலைப் போலவே இந்தப் பட்டியலிலும் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் பாஜக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருப்பதால் இந்த பட்டியலில் தமிழகம் இல்லை.
அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளையே தமாக ,பாமக,தேமுதிக மறுபடியும் கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை நேற்று கட்சி ஆரம்பித்த மன்சூரலிகானிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுஅதிமுக. தேமுதிக பாமகவும் சரியான பதில் இல்லை, தமிழகத்தில் 30 வருடம் ஆண்ட கட்சி அதிமுக அதன் கதையை அரசியலுக்கு வந்த 3 வருடத்திலேயே அண்ணாமலை அவர்கள் முடித்து விட்டார் என்கிறர்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் தமிழகத்தில் திமுக அதிமுகவை தவிர வேறு கட்சி மாற்றுக் கட்சி இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகளில் அ.திமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாமிடம் பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மோடியின் எதிர்ப்பு தாக்கம் தற்போது அறவே இல்லை. தமிழக பாஜக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த வேகத்தை அதிகமாக்கியுள்ளார் அண்ணாமலை. இதன் காரணமாக தமிழகத்தில் பா.ஜ.க அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.