தென்னிந்தியாவில் வலுவானது பா.ஜ.க! விரைவில் தமிழகத்தில் ஆட்சி! ஜே.நாட்டா!

jp nadda

jp nadda

பாரதிய ஜனதா கட்சி கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியாவில் பெரிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது தென்னிந்தியாவில் ஏற்றம் இறக்கம் என இருந்து கொண்டே வருகிறது . தற்போதைய தேர்தலிலும் .கர்நாடகாவில் கடந்த முறை 25 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் கடந்த முறை 4 இடங்களில் வென்றிருந்த நிலையில் இம்முறை அது 8 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதற்கு முன் மக்களவை தேர்தல் வரலாற்றில் வெற்றியே சந்தித்திராத பாஜக இம்முறை ஓரிடத்தில் வென்றுள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக முன்னேற்றம் கண்டுள்ளதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

தெலங்கானாவில் இது 19.45இல் இருந்து 35.08 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பாஜக வாக்கு சதவீதம் 13இல் இருந்து 16.68 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் 3.66இல் இருந்து 11.24 ஆக அதிகரித்துள்ளது.புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் இம்முறை 35.81% வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் கடந்த முறை பாஜகவின் கூட்டணி கட்சிதான் அங்கு களம் கண்டது. தென்மாநிலங்களில் கடந்த முறையை விட இவாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

இந்த நிலையில் பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜே.பி நட்டா திருச்சூர் மக்களவைத் தொகுதியில்பாஜக வெற்றி பெற்ற பின் முதல் முறையாக கேரளத்துக்கு ஜே.பி நட்டா பயணம் மேற்கொண்டார்.அப்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில பாஜக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:-

பாஜகவை வட மாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் உடைத்தெறியப்பட்டு அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பை விட அதிக வாக்குகளை பாஜக பெற்றது. கேரளத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றியும் பெற்றது. இங்கு எதிரணியாகவும் அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றார்.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டிலும் நாம் பிரதான கட்சியாக உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் ஜே. பி.நட்டா தெரிவித்தார். மேலும் இந்திய அரசியலில் 2014-க்கு முன்பும் பின்பும் என இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே தற்போது உள்ளது என ஜே.பி நட்டா தெரிவித்தார்.

Exit mobile version