பாஜகவில் இணைந்தார் குஷ்பு..!

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரவி தலைமையில் பாஜக தமிழக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பூ அவர் அண்மைக்காலமாக பாஜக ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் சில அதிர்வுகள் ஏற்பட்டது.

கடந்து சில தினங்களுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து தனது ஆதரவை சமூக வலைதள பக்கத்தில் குஷ்பு வெளியிட்டிருந்தார் .

இதனால் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட அரசியல் களத்தில் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்துக்கொண்ட குஷ்புவை பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

Exit mobile version