சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..!
காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!
காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..!
=====
தெய்வப் புலவர் திருவள்ளுவரை நாயன்மார்கள் வரிசையில் வைத்து பூஜிக்கின்றனர் இந்துக்கள். கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வரும் திருவள்ளுவ நாயனாருக்கு, சென்னை மயிலாப்பூரில் பழமையான கோயில் உள்ளது. இங்கு முறையான பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
மயிலாப்பூரில் 7 சிவாலயங்கள் உள்ளன. 8-வது சிவாலயமாக திருவள்ளுவ நாயனாரின் கோயில் சிறப்பு பெற்றுள்ளது.
இந்த கோயில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு உள்ள திருவள்ளுவ நாயனார் சந்நிதியில், மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்கப்பட்டு வருவது, இந்த கொயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்.
திருவள்ளுவ நாயனார், திருக்குறளில் கடவுள் வாழ்த்து அத்தியாயத்தில் உள்ள அனைத்து பாடல்களையும், கடவுளை வாழ்த்துவதற்காகவும், வழிபடுவதற்காகவும், வணங்குவதற்காகவும் பாடியுள்ளார்.
திருக்குறளில் பல்வேறு இடங்களில் இந்து வழிபாட்டு முறைகளும், இந்துக் கடவுள்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் திருவள்ளுவர் இந்து அல்ல என்று விதண்டா வாதம் செய்து வருகின்றனர்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலம், கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்த ஏசு கிறிஸ்துவின் காலத்திற்கு முந்தையது. முஸ்லிம் மதத்திற்கு ரொம்ப ரொம்ப முந்தையது.
ஆனால் திருவள்ளுவ நாயனார், கிறிஸ்தவர், அவர் ஞானஸ்தானம் எடுத்தார் என்றெல்லாம் அப்பட்டமாக புத்தகம் எழுதி வருகிறார்கள். திருமாவளவன் போன்ற இந்து விரோத சக்திகள், இதற்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
இந்துக்கள் கோவில் கட்டி, வழிபட்டு, கொண்டாடி வரும் திருவள்ளுவ நாயனாரை, இந்து அல்ல என்று திமுக, திக உள்பட சில கட்சிகளும், திமுகவிற்கு விலைபோல சில சில்வண்டு அமைப்புகளும், பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளுவ நாயனார் தினத்தை முன்னிட்டு, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியுடன், காவி உடை அணிந்த திருவள்ளுவ நாயனார் படத்தையும் வெளியிட்டு இருந்தார்.
அவரைப்போலவே பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், திருவள்ளுவ நாயனாரின் காவி உடை அணிந்த படங்களையே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உட்பட அதன் கூட்டணி பரிவாரங்கள் “ தை தை“ என குதித்தன. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி விட்டார்கள் என்று கூப்பாடு போட்டார்கள். இன்னும் சிலர் திருவள்ளுவர் மத சார்பற்றவர் என்று ஒப்பாரி வைத்தார்கள்.
இதெல்லாம் மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் அப்போது நடத்திய நாடகங்கள்.
இந்த முறையும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், தேசபக்த அமைப்பை சேர்ந்தவர்களும், காவி உடை தரித்த திருவள்ளுவ நாயனார் படத்தைத்தான் பயன்படு வாழ்த்து செய்திகளை வெளியிட்டு உள்ளார்கள்.
மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் காவி உடை அணிந்த திருவள்ளுவ நாயனாரின் படத்துடன், வாழ்த்து செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.
ஆனால் இதற்கு முன்பு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதா என்று கொக்கரித்தவர்கள், கூக்குரல் எழுப்பியவர்கள், ஒப்பாரி வைத்தவர்கள் ஒருவர்கூட இன்று வாய்திறக்கவில்லை.
மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எங்கே சென்று ஒழிந்தார்கள் என்று புரியவில்லை.
எல்லாம் நாடகம் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.