பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆகிய நாட்களில் ஹிந்து வழிப்பட்டு தளங்களை திறக்க வேண்டும். என கடந்த வாரம் வியாழக்கிழமை முக்கிய கோவில்களின் முன் அறப்போட்டம் நடத்தினார். இந்த அப்போராட்டத்தில் பாஜக மட்டுமின்றி மக்க்ளும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
சென்னை – பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு முன்பு அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை,
10 நாட்களுக்குள் கோவில்களை திறக்க வேண்டும் என்றும் அவ்வாறு திறக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் எனவும் திமுக அரசினை ஸ்தம்பிக்க வைப்போம் எச்சரிக்கை விடுத்தார்.மேலும் தியேட்டர்கள் திறக்கிறார்கள், டாஸ்மாக் கடைகளைத் திறக்கிறார்கள். அங்கெல்லாம் வராத கொரோனா கோவில்களை திறந்தால் எப்படி வரும்.கோவில்களைத் திறக்காவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள 4.50 லட்சம் பேர் கோவில்களுக்கு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அவர் பேசினார்.
இந்த நிலையில் விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில் திறக்கப்பட வேண்டும் என்று கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு தமிழக அரசு முடிவெடுக்கும் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இது பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. பாஜக தலைவராக பொறுப்பேற்று மிகப்பெரிய மக்கள் வெற்றியை பெற்றுள்ளார் அண்ணாமலை