பாமரனும் பார் ஆளமுடியுமா இதெல்லாம் பாஜகவில் மட்டுமே சாத்தியம்…

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சென்னையில் வந்து இறங்கிய போது விமான நிலையத்திலிருந்து தெருவின் இருமருங்கிலும் பாஜக தொண்டர்கள் பதகையுடனும், கொடிகளுடன் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.  

உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி சாலைப்போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்பதால் 12 மணிக்கு முன்பாகவே தொண்டர்கள் குவியத் துவங்கினர். 

அப்போது ஒரு காட்சி தொண்டர்களின் மனதைக் கவர்ந்தது.பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவரான வானதி ஸ்ரீநிவாசன் அவர்கள், தெருவில் ஓரத்தில், பிளாட்பாரத்தில் அமர்ந்து கொண்டு, பாஜக தொண்டர்களுடன்  உணவு அருந்திக் கொண்டிருந்தார். 

 வானதி சீனிவாசன் அவர்கள் மகளிர் அணியின் அகில இந்திய தலைவர். இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் தொண்டருடன் தொண்டராக இணைந்து வீதியில் அமர்ந்து மதிய உணவு அருந்துவது பாஜகவில் மட்டுமே சாத்தியம் என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.

குஜராத் மாநிலத்தில் பாஜகவின் பூத் கமிட்டியில் பணியாற்றிய அமித்ஷா தனது உழைப்பால் உயர்ந்து கட்சித் தலைவராக பணியாற்றி இப்போது மத்திய உள்துறை அமைச்சராக உயர்ந்துள்ளார்.  

சாதாரண தொண்டனாக கட்சியில் இணைந்து அயராத உழைப்பினால் 29 வயதிலேயே கட்சியின் இளைஞரணி தலைவராக உயர்ந்தவர் தேஜஸ்வி சூர்யா.

அமித்ஷா, தேஜஸ்வி சூர்யா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்ல தனது திறமையாலும் உழைப்பினாலும் அற்பணிப்பாலும் அகில இந்திய கட்சி பதவியை அலங்கரிக் கின்றனர்.  

இதெல்லாம் பாஜகவில் மட்டுமே சாத்தியம்.- கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்

Exit mobile version