தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன் தமிழக அரசியல் கட்சியின் தலைவர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார்.

தேர்தலில் தான் போட்டியிடுவதாக கூறிய அவர், எந்த தொகுதியில் போட்டி என்பது கூட்டணி கட்சியின் பேச்சுவார்த்தையின் போது முடிவாகும் என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டணி கட்சிகளை கேட்காமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக முடிவெடுத்து அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாகவும் ஜான்பாண்டியன் குற்றம் சாடியுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version