பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது இதில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டு நாளை பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் ஓர், இரு வாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.
இதில் பாஜக தலைவர் ஜே பி நட்டா, மூத்த அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ் நர்சிங் அமைப்பு செயலாளர் பி எல் சந்தோஷ் குழுவின் உறுப்பினர்கள் எடியூரப்பா, சர்ப்பானந்தா சோனாவால், லட்சுமணன் ,வானதி சீனிவாசன் ,இக்பால் சிங் யாதவ், பூபேந்திர யாதவ் பிரகாஷ் மாத்தூர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலுவாக வெற்றி பெற்ற இடங்களில் அவர்களை தோற்கடிப்பது குறித்து வீகங்கள் வகுக்கப்பட உள்ளன.
அந்த எதிர்க்கட்சிகளின் வலுவான தொகுதிகளில் பாஜக சார்பில் வெற்றியை பெற்று தரக்கூடிய வேட்பாளர்களை களம் இருக்க தீர்மானம் செய்யப்பட உள்ளது.
தேர்தல் தேதி வருவதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த தேர்தலில் இதுவரை மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரடியாக போட்டியிட உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தெரிவித்த நிலையில் அவர்கள் தமிழகத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.