அடுத்த டார்கெட் பிஜேபிக்கு திருப்பம் தருமா திருப்பதி ?

திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவார்கள். இப்பொழுது
திருப்பதி பிஜேபிக்கு திருப்பம் தருமா என்று தான் தேசிய அளவில் விவாதமாக இருக்கிறது.

இப்பொழுது தான் தெலுங்கானாவில் நடைபெற்ற டுபாக்கா சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்று சந்திரசேகரராவுக்கு ஷாக் அளித்து ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

இப்பொழுது ஆந்திராவில் திருப்பதி லோக்சபா இடைத்தேர்தல் மூலமாக ஆந்திரா
அரசியல் பரபரப்பாகி கொண்டு இருக்கிறது.திருப்பதி எம்பியாக இருந்த பள்ளி துர்கா பிரசாத் ராவ் கடந்த செப்டம்பர் மாதம் கொரானாவினால் இறந்துவிட்டார் .

பள்ளி துர்கா பிரசாத் ராவ் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசத்தை சேர்ந்த பனாபக லட்சுயை 2,28,3 76 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடி த்தவர்.பிஜேபி கடந்த லோக் சபா தேர்தலி ல் ஆந்திர அரசியல் களத்திலேயே இல் லை என்பதால் கடந்த லோக்சபா தேர்தல்லை வைத்து பிஜேபியின் செயல்பாட்டினை கணக்கிட முடியாது.

காலம் காலமாக காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த திருப்பதி ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு கைமாறி விட்டது.

இனி திருப்பதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை இல்
லை.

ஒய்எஸ்ஆர் காங்கிரசா? தெலுங்கு தேச மா? இல்லை பிஜேபியா யாருக்கு வெற்றி என்பது தான் திருப்பதி லோக்சபா இடைத்தேர்தலில் இப்பொழுது விவாதமாக இருக்கிறது.இதற்கு திருப்பதி லோக்சபா
தொகுதியின் கடந்த கால தேர்தல் வரலாற்றை தேடிச்செல்வோம்.

இதுவரை 16 முறை லோக்சபா தேர்தலை சந்தித்து இருக்கிற திருப்பதி தொகுதியி ல் காங்கிரஸ் 12 முறையும்ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 2 முறையும் தெலுங்கு தேசம்
ஒரு முறையும் பிஜேபி ஒரு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.

பார்த்தீர்களா..திருப்பதி ஏற்கனவே பி ஜேபிக்கு அளித்து இருக்கிறது.1999 லோக் சபா தேர்தலில்பிஜேபி தெலுங்கு தேசத்தின் கூட்டணிஉதவியுடன் திருப்பதி லோக்சபா தொகுதியை கைப்பற்றி இருக்கிறது.

1999ல் பிஜேபியை சேர்ந்த டாக்டர் நந்திப கு வெங்கிடசாமி தெலுங்கு தேச கூட்டணியின் உதவியுடன் காங்கிரஸ் கட்சி யை தோற்கடித்த வரலாறு ஏற்கனவே இருக்கிறது.இன்னொரு முக்கிய விசயம் என்ன தெரியுமா?

1998 திருப்பதி லோக்சபா தொகுதியில் தனியாக போட்டியிட்ட பிஜேபிக்கு 178,773 வாக்குகள் கிடைத்த வரலாறு
இருப்பதால் இந்த திருப்பதி இடைத்தேர்தல் பிஜேபிக்கு ஆந்திர அரசியலில் திருப்பத்தை அளிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

திருப்பதி லோக்சபா இடைத்தேர்தல் மூல மாக ஆந்திராவில் பிஜேபிக்கு திருப்பத் தை அளித்து விடலாம் என்று ஆந்திர மாநில பிஜேபி பொறுப்பாளராக இருக்கும் சுனில் தி யோதர் தீயாக வேலை செ ய்து கொண்டு இருக்கிறார்

சுனில் தியோதரை பற்றி உங்களுக்கு
நன்றாகவே தெரியும். திரிபுராவின்

அரசியலையே மூண்றான்டுகளில் மாற்றி 25 ஆண்டு கால இடதுசாரிகள் ஆட்சியை
காலி செய்து 2018 ல் இந்தியாவே திகை ப்புடன் திரிபுராவை பார்க்க வைத்து பிஜேபி ஆட்சியை திரிபுராவில் உருவாக்கியவர்.

திரிபுராவில் பிஜேபி ஆட்சியை உருவா க்கிய பிறகு சுனில் தியோதருக்கு அளிக்கப்பட்ட மாநிலம் தான் ஆந்திர பிரதேசம்.
சுனில் ஆந்திராவுக்கு வந்த நேரம் பிஜே பிக்கு சரியில்லை என்றே கூறவேண்டும்.


ஏனென்றால் அப்பொழுது தான் சந்திர பாபுநாயுடு பிஜேபி கூட்டணியில் இருந்து
விலகி பிஜேபிக்கு எதிராக ஆந்திர மக்க ளின் எதிர்பார்ப்பான சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கையை ஊதி பெரிதாக்கி பிஜேபிக்கு எதிராக ஆந்திர மக்களிடையே ஆத்திரத் தீயை மூட்டி இருந்தார்.

அந்த தீயில் பிஜேபி விழுந்ததால் ஆந்தி ராவில் நடைபெற்ற 2019 லோக் சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு படுதோல்வி கிடைத்தது. இருந்தாலும் 2019 தேர்தலில் பிஜேபி மிக சாமர்த்தி யமாக ஒரு வேலை செய்தது.

அதாவது தன்னுடைய எதிரியாக மாறி விட்ட சந்திரபாபு நாயுடுவை காலி செ ய்ய 2019ல் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தலில் பிஜேபி மறைமுகமாக ஒய்எஸ்ஆர் கா ங்கிரசிற்கு ஆதரவு அளித்து தன்னுடைய வாக்குகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கிடைக்க வைத்தது.

இதனால் தான் 2019 லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலில சந்திரபாபு நாயுடு மரணஅடி வாங்கினார்.

அதற்கு பிறகு சந்திரபாபு நாயுடுவை ஆந்திர அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்த பிஜேபி தீயாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? சந்திர பாபு நாயுடு பிஜேபி கூட்டணியை விட்டு
செல்லாமல் இருந்து இருந்தால் அவர் தான் இப்பொழுது ஆந்திராவின் முதல்வ ராக இருந்து இருப்பார்.ஆனால் விதி எ ன்று ஒன்று இருக்கிறது அல்லவா.. அது சந்திரபாபு நாயுடு பிஜேபிக்கு செய்த துரோகத்திற்கு என்றுமே அவரை முதல்வ ராக வர விடாது.

ஆந்திர மக்களிடம் இழந்து விட்ட அரசிய ல் செல்வாக்கை மீண்டும் பெற சந்திரபா பு நாயுடு திருப்பதி லோக்சபா இடைத் தேர்தலை பயன் படுத்த நினைக்கிறார்
ஆனால் திருப்பதி இடைத்தேர்தல் வெ ற்றி மூலமாக பிஜேபி தெலுங்கு தேசத்தை ஓரம் கட்டி விட்டு ஆந்திராவில் இரண்டாவது இடத்திற்கு வர நினைக்கிறது.

திருப்பதி லோக் சபா இடைத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெறுகிறதோ இல்லையோ 2 வது இடத்தை பிடிப்பதற்கு கடு மையாக போராடி வருகிறது. ஏனெனில்
இதில் 2 வது இடம் பிஜேபிக்கு கிடைத்துவிட்டால் தெலுங்கு தேசம் கட்சியின் க தை முடிந்து பிஜேபி வளர ஆரம்பிக்கும்.


ஆந்திராவில் பிஜேபிக்கும் ஜெகன் மோ கன் ரெட்டிக்கும் இடையே ஒரு மறைமுக அன்டர்ஸ்டான்டிங் இருக்கிறது. அதன்படி தெலுங்கு தேசத்தை காலி செய்வதற்கு
மறைமுகமாக இந்த திருப்பதி இடைத்தேர்தலை இரண்டு கட்சிகளும் பயன் படு
த்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

அதாவது கடந்த 2019 லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்த பிஜேபியினர் ஒய்எஸ்ஆர் காங்கிரசிற்கு வாக்களித்தார்கள்.

பதிலுக்கு இப்பொழுது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிஜேபிக்கு வாக்களித்து பிஜேபியை வெற்றி பெற வைக்கலாம்.

இல்லையென்றாலும் 2 வது இடத்திற்கு பிஜேபியை கொண்டு வர ஜெகன் மோக ன் ரெட்டி துணை நிற்பார். பிஜேபி மற்றும்
ஒய்எஸ்ஆர் காங்கிரசின் பொது எதிரியாக இருப்பவர் சந்திரபாபு நாயுடு தான் என்பதால் இரண்டு கட்சிகளும் தெலுங்குதேசத்தை ஒழிக்க திருப்பதி லோக்சபா இடைத்தேர்தலில் மறைமுகமாக கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.


திருப்பதி லோக்சபா இடைத் தேர்தல் அனேகமாக வருகிற 2021ம் ஆண்டின் துவகத்தில் வரலாம். இந்த திருப்பதி்லோக் சபா இடைத்தேர்தல் பிஜேபிக்கு மிகப்பெ ரிய திருப்பத்தை அளித்து ஒட்டுமொத்த இந்தியாவே பிஜேபி தென்னிந்தியாவில் வளரும் வேகத்தை பார்த்து மிரண்டு நிற்கும்.

தெலுங்கானாவில் இடைத் தேர்தல் நடை பெற்ற டுபாக்கா மாதிரியே திருப்பதியும் பிஜேபிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால் டுபாக்கா மாதிரியே திருப்பதியிலும் பிஜேபி வெற்றி பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திருப்பதி யை நோக்கி திரும்பி பார்க்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதற்கான களப்பணிகளை படு கச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறார் சுனில்தியோதர். திரிபுராவில் பிஜேபி யை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் மூல மாக ஒட்டுமொத்த இந்தியாவையும்
யார் இந்த சுனில் தியோதர்? என்று தேட வைத்தவர்.

அடுத்து இப்பொழுது திருப்பதி வெற்றியின் மூலமாக மீண்டும் இந்தியாவை யார் இந்த சுனில் தியோதர் என்று தன் னை நோக்கி திரும்பி பார்க்க வைக்க
இருக்கிறார்.எனி ஹவ் அட்வான்ஸ் வாழ்த்துகள் ..சுனில் ஜி

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

Exit mobile version