சேலம் நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தொழிற்சங்க அலுவலகம் மற்றும் மின் வாரிய தொழிலாளர் நலச்சங்கத்தின் அலுவலகம் முதல் அக்ரஹாரம் திப்பு சுல்தான் மார்க்கெட் எதிரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அலுவலகத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்கள். பெயர் பலகையை சேதப்படுத்தி உள்ளார்கள் பூட்டை உடைத்து கதவைத் திறப்பதற்கு முயற்சி செய்துள்ளார்கள்.
காலையில் அலுவலகம் திறக்க வரும்போது இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் ராமதாஸ் அவர்கள் காவல்துறையில் புகார் மனு வழங்கியதன் பேரில்.
அருகாமையில் உள்ள கடைகளில் சிசிடி கேமரா பதிவின் மூலம் இக்கொடூரச் செயலை செய்தவர்களை கண்டறியும் வகையில் சிசிடிவி கேமராவில் பதிவு எடுத்தபோது இரண்டு நபர்கள் கல்வீசி தாக்கியது நன்றாக தெரிகிறது காவல்துறை அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பத்தை தொடந்து வேறுதும் அசம்பாவிதம் நடைபெறா வன்னம் காவல்துறை ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















