உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை 3வது இடத்திற்கு தள்ளிய பாஜக..

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. உடனே தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த ஒன்பதாம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் நேற்று என்னபட்டது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தலில் ஆறு பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 6 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு ராஜபாளையத்தில் ஒன்பதாவது வார்டில் அஞ்சலி முரளி என்பவர் பாஜக சார்பில் போட்டியிட்டார். இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அஞ்சலி 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக விசிக உள்ளிட்ட வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். மொத்தம் பதிவான வாக்குகள் 198, அதில் விசிக சார்பில் சாவி சின்னத்தில் போட்டியிட்ட மலர் 58 வாக்குகளும், பாஜக சார்பில் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட அஞ்சலி 105 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட சரோஜா 34 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பஞ்சாயத்து மாவட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றது திமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SOURCE TIMES OF INDIA

Exit mobile version