தமிழகத்தில் தொடர்ந்து இந்து கடவுளை இழிவு படுத்தும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கறுப்பர் கூட்டம் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,
நமது பண்பாடு, பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்பதை முன்னிருத்தியும்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று முதல் அதன் தமிழக தலைவர் திரு எல்.முருகன் அவர்கள் வெற்றிவேல் யாத்திரையை திருத்தணியில் இருந்து துவங்கி தமிழகம் முழுவதும் செல்ல இருந்த நிலையில்,
இன்று தமிழக அரசு இந்த யாத்திரையை தடை செய்து திரு.எல்.முருகன் உட்பட ஆயிரக்கணக்கான பேர்களை கைது செய்துள்ளது.
இந்த பாரபட்ச போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.
தமிழகத்தில் தி.மு. க சார்பில் உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையை காட்டி மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிமுறையை பின்பற்றாமல் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றார்கள்.
கோவையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கொரோனா வழிமுறையை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அவர்களைத் தடுக்காமல் நல்ல நோக்கத்துக்காக ஒரு ஆன்மீக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட யாத்திரையை அரசு தடுப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.
தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு இடம் கொடுக்காமல், பாரபட்சம் பார்க்காமல் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
நன்றி வணக்கம்
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்,இந்து முன்னணி தமிழ்நாடு.