Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024- கடக ராசிகாரர்களுக்கு இக்காலம் உங்களுக்கு பொற்காலம்-ஜோதிடர் -திருக்கோவிலூர் பரணிதரன்- 9444 393 717

Oredesam by Oredesam
April 30, 2024
in ஆன்மிகம், செய்திகள், தமிழகம், ராசிபலன்
0
guru peyarchi

guru peyarchi

FacebookTwitterWhatsappTelegram

கடகம்
புனர்பூசம் 4 ம் பாதம், மற்றும் பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்; ராசி எதுவென்று தெரியாத ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டு, டே, டோ, கொ, கௌ, மெ, மை … ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்
ராசியின் அதிபதி: சந்திரன். நட்சத்திர அதிபதிகள்: குரு, சனி, புதன். யோகாதிபதிகள்: குரு, செவ்வாய், சந்திரன். மாரகாதிபதி: சனி.


கடல்போல் வாழும் கடகம்
மனக்காரகனான சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்து, எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்பட்டு வெற்றி அடையக்கூடிய கடக ராசி நண்பர்களே!அழகையும் அறிவையும் வழங்கிடக்கூடிய சந்திர பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்கள் அறிவாற்றலால் மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

நேர்மையையும் நியாயத்தையும் குறிக்கோளாகக் கொண்டு மனசாட்சியின் படி செயல்படும் உங்களுக்கு, வாக்கு பலமும் சாதுரியமான பேச்சாற்றலும், எதையும் ஆராயக் கூடிய சக்தியும் பிறவிச்சொத்தாகும்.நமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனநிலையை நீங்கள் கொண்டிருப்பீர்கள் என்பதுடன் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள்.

பொன்னையும் பொருளையும் விட புகழின் மீதே உங்களுக்கு அளவற்ற ஆசைகள் இருக்கும். வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை கொண்டிருக்கும் நீங்கள், சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். உங்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் அதை எப்படியாவது முடித்து தந்து விடுவீர்கள்.

உங்கள் மனதில் கடந்தகால, நிகழ்கால சிந்தனைகளை விட எதிர்காலத்தைப்பற்றிய எண்ணமே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். நடந்து முடிந்தவற்றை பற்றி எப்போதும் கவலைப்படாத நீங்கள், அடுத்து என்ன செய்யலாம்? என்பது பற்றியே யோசித்து கொண்டிருப்பீர்கள். உங்களின் திறமை, தகுதி, பலம் போன்றவற்றை நம்பி செயல்பட்டு வெற்றி பெறுவதைவிட எதிரியின் பலம் பலவீனம் பார்த்து அதற்கேற்ப செயல்பட்டு நீங்கள் வெற்றி பெறுவதே அதிகமாக இருக்கும்.

எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி, எதையும் கிரகித்துக்கொள்வதில் சக்தி படைத்தவரான நீங்கள், இரக்க குணமும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராக இருந்தாலும், அனைத்தையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்படுபவராகவும் இருப்பீர்கள்.உங்கள் ராசிநாதன் வளர்வதும் தேய்வதுமாக இருப்பதுபோல் உங்கள் வாழ்க்கையும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கொண்டதாகவே இருக்கும். என்றாலும், உங்களிடம் போட்டிப்போட்டோ, மோதியோ உங்களை யாராலும் வெல்ல முடியாது.

செயற்கரிய காரியங்கள் செய்து சாதனையாளராக விளங்க வேண்டும் என்று வாழ்ந்துவரும் உங்களுக்கு, ஆற்றல் மிக்கவர்கள் எப்போதும் உறுதுணையாக இருந்து உங்களை பலமிக்கவர்களாக மாற்றுவார்கள். எந்தவொரு செயலையும் துணிச்சலுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் பெற்றவரான உங்களுக்கு சமூகத்தில் தனி மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

உணர்ச்சி வசப்படும்போது உங்களை சமாதானப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவே இருக்கும். அதேபோல் ஒரு உதவிக்காக நீங்கள் ஒருவரை நாடும்போது அவர் ஒத்துவராவிட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவரை உதறித் தள்ளிவிட்டு வேறு வழியை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
பட்டங்களும் பதவிகளும் அரசியலும் உங்களை நாடிவரும். முப்பது வயதிற்குமேல்தான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தையே காண்பீர்கள்.

உங்களில் சிலருக்கு போலீஸ், ராணுவம், சட்டம் போன்றவற்றிலும், ஒருசிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். ஒரு சிலர் கடல் கடந்து சென்று பொருளீட்டுவீர்கள். உங்களிடம் பழகுபவர்களின் சுயரூபம் தெரியாமல் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்யும் நீங்கள் அவர்களால் ஏமாந்து போவதும் உண்டு. நட்புகளிடத்தில் எச்சரிக்கை இல்லையென்றால் அதனால் உங்களுக்கு சங்கடங்களே அதிகமாகும்.

களத்திரக்காரகன் சுக்கிரன் உங்கள் ராசிநாதனுக்கு பகை பெற்றவர் என்பதும், உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவானும் உங்கள் ராசிநாதனுக்கு பகை பெற்றவர் என்பதாலும் காதல் உங்களுக்கு பாதகமாகும். குடும்ப வாழ்க்கையும் சங்கடத்திற்குரியதாகவே இருக்கும் என்பதால், திருமண விஷயத்தில் மிக மிக யோசித்து கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும்.

நீங்கள் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால், கொடுக்கல் வாங்கலில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். லாட்டரி, ரேஸ், போட்டி பந்தயங்கள் உங்களுக்கு வெற்றியைத்தராது என்பதால் அதில் கவனத்தையும் பணத்தையும் செலுத்தி நேரத்தையும் பொருளையும் வீணாக்கி விடாதீர்கள்.

உங்கள் ராசியின் நாயகன் கலைகளுக்கும் உரியவன் என்பதால், கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். உங்களின் மதிநுட்பமான காரியங்களால் எல்லோரது நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தனித்த அடையாளத்துடன் மற்றவர்கள் முன்பாக வாழக்கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.

எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் நாவன்மையாலேயே உங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வீர்கள். நினைவுத்திறன் அதிகம் பெற்றவரான நீங்கள் எந்தவொரு விஷயத்திலும் உங்கள் வாதத்திறமையாலேயே வெற்றி காண்பீர்கள் என்பதால், உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போது இருந்து கொண்டே இருக்கும்.

திறமை செல்வாக்கு புகழ் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான நீங்கள் எத்தகைய சக்தி படைத்தவரையும் பணியை வைத்திடக்கூடிய சக்தி படைத்தவராக இருப்பீர்கள். குடும்பத்தை விட பொது சேவை புரிவதிலேயே உங்கள் நாட்டம் மேலோங்கி இருக்கும். இவையெல்லாம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களின் பொதுப்பலன்களாகும்.

நீங்கள் கடக ராசியில் பிறந்திருந்தாலும், ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும் லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும் பொதுவாக ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில்தான் கோட்சார ரீதியாக கிரகங்களின சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்களின் வழியே நன்மைகள் உண்டாகிட வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.

யோகத்தை உண்டாக்கும் லாப குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான கடக ராசிக்கு பத்தாம் வீடான மேஷத்தில் சஞ்சரித்து உங்களை சங்கடத்திற்கு மேல் சங்கடத்திற்கு ஆளாக்கி வந்த குரு பகவான், 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு 11 ம் வீடான ரிஷப ராசிக்குள் சஞ்சரித்து உங்களுக்கு நன்மைகளுக்கு மேல் நன்மைகளை வழங்கப் போகிறார்.

கடந்த வருடத்தில் உங்கள் ராசியினரில் பலர் சிரமத்திற்கு மேல் சிரமத்தை அனுபவித்து, பல்வேறு சோதனைகளுக்கு ஆட்பட்டு, அவதிப்பட்டிருப்பீர்கள். ஒரு பக்கம், பண நெருக்கடி. மறுபக்கம் தொழிலில் முடக்கம், நஷ்டம், பிரச்சினை, உத்தியோகத்தில் சங்கடங்கள், அதனால் குடும்பத்திலும் பாதிப்பு என்று படாதபாடு பட்டிருப்பீர்கள். இதற்கெல்லாம் காரணம் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரித்த குரு பகவான்தான்.

இது குறித்து ஒரு பழம் பாடலில், ‘ஈசனாரொரு பத்திலே தலையோட்டிலேயிரந்துண்டதும்…’ என்று எழுதப்பட்டுள்ளது. பத்தில் குரு வந்தால் தரித்திரம் அதிகமாகி நெருக்கடிகளையும் அவமானங்களையும் சந்தித்து வாழ வேண்டும் என்ற விதிக்கேற்ப, நீங்கள் சங்கடங்களுக்கு ஆளாகியிருப்பீர்கள்.

துன்பம் என்றால் இன்பம். நஷ்டம் என்றால் லாபம் என்று மாற்றம் உண்டாவதுபோல் நீங்கள் சந்தித்துவந்த சங்கடங்களுக்கெல்லாம் மாற்றத்தை உண்டாக்கப் போகிறார் உங்கள் ராசிக்கு 11 ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரும் குருபகவான். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் உங்களுக்கு வழங்கி உங்கள் மனதில் சந்தோஷத்தை உண்டாக்கிடப் போகிறார்.

நீங்கள் சொல்வதை எல்லாம் நம்ப முடியவில்லையே! நாங்கள் பட்ட சங்கடங்கள் எங்களுக்குத்தானே தெரியும்! எப்படி அதில் திடீர் மாற்றம் வந்துவிடும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

வாழ்க்கையில் நன்மைகளை உண்டாக்குவதும் கிரகங்களே! கெடுதலை வழங்குவதும் கிரகங்களே என்பதால், அவர்களின் சஞ்சாரத்திற்கேற்ப பலன்களும் மாறுபடும் என்ற உண்மையை நீங்கள் இக்காலத்தில் உணருவீர்கள்.

பத்தாம் வீட்டிலிருந்து பதினொன்றாம் வீட்டிற்கு குரு பகவான் செல்வது உங்களுக்கு யோகமான காலம் என்பதை நீங்கள் உணரப் போகிறீர்கள். 11 ம் இடம் என்பது லாபஸ்தானம், பணம், பொன், பொருளால் லாபம் காணுமிடம். மூத்த சகோதரத்தால் பலன் கிடைத்திடக்கூடிய இடம். இளைய தாரத்தால் மகிழ்ச்சியை அடையக்கூடிய இடம். மேலைநாட்டு பயணத்தையும் வாகன யோகத்தையும் வழங்கிடும் இடம்.

உங்கள் ராசிக்கு 11 ம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகப்போகிறது. உடல் நிலையில் முன்னேற்றமும், மன நிலையில் மகிழ்ச்சியும் ஏற்படப்போகிறது.

நீங்கள் நினைத்திருந்த ஒவ்வொன்றும் நினைத்தபடியே நடந்து அதனால் முன்னேற்றங்களையும் நீங்கள் அடையப் போவதால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகிறீர்கள். வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற நன்மைகளும், நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கப் போவதுடன் நீங்கள் சொல்லும் வாக்கும் மதிப்படையும். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகமும், மண வாழ்க்கையில் பிரிவை சந்தித்திருப்பவர்களுக்கு புதிய துணையும் அமையும். என்பதுடன், நீண்டநாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆலய தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் உண்டாகும். இதற்கெல்லாம் காரணம் ராசிக்கு 11 ல் சஞ்சரிக்கும் குரு பகவான்தான்.

குரு பார்க்கும் இடத்திற்கு சுப பலன்களை வழங்குவார் என்றும், அமரும் இடத்திற்குரிய பலன்களை பாதகமாக்குவார் என்றும் கூறப்படும் நிலையில், 11 ம் இடத்தில் அவர் அமரும்போது அந்த இடத்திற்கும் சேர்த்து நன்மைகளை வழங்குவார் என்று கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். அங்கிருந்து 5, 7, 9 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ம் இடங்களின் மீது செலுத்த உள்ள குரு பகவான் அந்த இடங்களுக்குரிய பலன்களையும் சுபமாக்கிடப் போகிறார்.

முதலில், தனது ஐந்தாம் பார்வையை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமாகிய தைரியம் மற்றும் சகோதர ஸ்தானத்தின்மீது செலுத்திடும் குருபகவான் உங்கள் தைரியத்தை அதிகப்படுத்துவார். இதனால் உங்கள் துணிச்சல் அதிகரிக்கும். இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் செயல்பாடுகளில் சங்கடங்களை அடைந்து வந்த நிலை இனி மாறும். புதிய தைரியம் வந்ததுபோல் நடைபோடுவீர்கள். உங்கள் செயல்களுக்கு சகோதர சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும உண்டாகும். யோகமும் போகமுமாக வாழ்க்கை இன்பத்தில் மூழ்கும். உடன் பணி புரிந்தவர்களுடன் உண்டாகி இருந்த பிரச்சினைகள் விலகி நட்பான நிலை உண்டாகும்.

அடுத்து உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான, பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தை தனது ஏழாம் பார்வையால் பார்த்திடும் குரு பகவான், குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியிருந்தவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கப் போவதுடன், குழந்தைகள் வழியே நன்மைகளையும் பெருமைகளையும் அடைய வைப்பார். அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய அச்சம் உங்களை விட்டு நீங்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் அகலும், உங்கள் புத்திக்கூர்மை இக்காலத்தில் பளிச்சிடும், இறைவழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் அறிவின் வழியே உங்களை நம்புகிறவர்களையும் நல்வழியில் நடத்துவீர்கள்.

அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையை உங்களுடைய களத்திரம் மற்றும் நட்பு ஸ்தானத்தின் மீது செலுத்தும் குருபகவான், திருமண வயது வந்தும் அதற்குரிய பாக்யம் உண்டாகவில்லையே என்ற சங்கடப்பட்டு வந்த நிலையை மாற்றி மணமாலை ஏந்தும் பாக்கியத்தை இக்காலத்தில் வழங்கப் போகிறார். வயது வந்த பிள்ளைகளுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் மாற்றி வீட்டில் மங்கள வாத்தியம் முழங்க வைப்பார். நட்பு வட்டாரத்தில் இருந்த கசப்புகளை மாற்றி நட்பை பலப்படுத்துவார். கூட்டுத் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உடலும் மனமும் பொலிவு பெறும். தடைபட்டிருந்த மகிழ்ச்சியும் சந்தோசமும் இனி தொடரும் என்பதால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைநிலை எல்லா வகையிலும் நன்மைகளையே அடையப்போகிறது.

பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 3.5.2024 முதல் 2.6.2004 வரை அஸ்தங்கம் அடைவதால் இக்காலத்தில் அவரால் முன்புபோல் யோகமான பலன்களை வழங்க முடியாமல் போகும். இருந்தாலும், அவர் உங்களுக்கு பாக்யாதிபதி என்பதால் எந்தவிதமான பாதகங்களையும் உங்களுக்கு உண்டாக்க மாட்டார். இக்காலத்தில் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு நன்மையாக இருக்கும்.

வக்ர காலமும் வசந்த காலம்தான்
குரு பகவானின் சஞ்சார நிலையில் அஸ்தமனமும், வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலத்தில் அவர் வழங்கும் பலன்களிலும் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை குரு வக்ரமடைவதால் லாப ஸ்தானத்தில் இருந்து அவர் வழங்கிவரும் பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்ரமடையும் போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், இக்காலத்தில் உத்தியோகம் தொழிலில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இருந்தாலும், பண வரவு என்பது எதிர்பார்த்த அளவில் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்புகள் விலகும்.

அஷ்டம சனியால் கஷ்டங்கள் கூடும்
சனிபகவான் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்கிடக் கூடியவர் என்பதால், அஷ்டம ஸ்தானத்தில் அவர் சஞ்சரிக்கும் காலத்தில், வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவக்குறைவு ஏற்படும். ஒருசிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். பணத்தேவை அதிகரிக்கும். அனைத்திலும் தடை, தாமதம் என்ற நிலை உருவாகும். ஒரு சிலருக்கு, வசிக்கும் ஊரை விட்டு வெளியூரில் சென்று வசிக்கவேண்டிய நிலை ஏற்படும். முயற்சிகளில் இழுபறி உண்டாகும். எதிர்பாராத விபத்துகள், நோய் என்று மருத்துவ செலவுகளையும் இக்காலத்தில் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

ராகு – கேது சஞ்சாரப் பலன்கள்
குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், கேது தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். எல்லாவற்றிலும் உங்கள் செல்வாக்கு உயரும். தைரியமாக சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்களைவிட மேலானவர்களால் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சகல விதத்திலும் இக்காலம் உங்களுக்கு நன்மையான காலமாக இருக்கும். இதுவரை உங்களை நெருங்காமல் விலகியிருந்த உறவுகள் இனி உங்களைத்தேடி வருவார்கள். அந்த அளவிற்கு உங்கள் அந்தஸ்து உயரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கும் ஒரு நல்ல காலம் இருப்பதை இக்காலத்தில் நீங்கள் உணருவீர்கள். ராகு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இக்காலம் உங்களுக்கு பாக்ய காலமாகும். தெய்வ அருள், தீர்த்த யாத்திரை, வழிபாடு ஆகியவற்றிற்கெல்லாம் இப்போது வழியுண்டாகும். தெய்வ அனுகூலம் உங்களுக்கு இப்போது பரிபூரணமாக கிடைக்கும். இதுவரை இந்த சங்கடங்கள் விலகி வாழ்க்கையில் வெற்றியும் லாபமும் உண்டாகும்.

சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
ஒவ்வொரு கிரகமும் அவரவர் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப பலன்களை வழங்குவதுபோல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது அதிர்ஷ்டமான பலன்களை வழங்குவார். அக்காலங்களில் ஜாதகருக்கு எல்லா விதத்திலும் நன்மைகள் உண்டாகும். அந்த ரீதியில் கடக ராசியினரான உங்களுக்கு, சித்திரை, வைகாசி, புரட்டாசி, மார்கழி ஆகிய நான்கு மாதங்களில் மற்ற கிரகங்களின் நிலைகள் உங்களுக்கு எதிர்மறையாக இருந்தாலும், இககாலத்தில் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உங்களுக்கிருக்கும் சங்கடங்களை எல்லாம் இல்லாமல் செய்வார். உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்குகளில் சாதகத்தை உண்டாக்குவார். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிலிலும் இக்காலத்தில் லாபத்தை ஏற்படுத்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கச் செய்வார். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சிகளை நிறைவேற்றுவார். அரசியல்வாதிகளின செல்வாக்கை உயர்த்துவார் புதிய சொத்து சேர்க்கையை உண்டாக்குவார். எதிரிகள் இல்லாத நிலையை உருவாக்குவார்.

பொதுப்பலன்
இதற்கு முன்பு உங்களுக்கிருந்த நெருக்கடிகள் இனி இல்லாமல் போகும். செலவுகள் கட்டுப்படும். வரவுகள் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குலதெய்வ அருள் தெய்வ அருள் எல்லாம் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும். இதுவரையில் நீங்கள் எதிர்பார்த்து உங்களுக்கு கிடைக்காமல் போன ஒவ்வொன்றும் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி தரும். இளைஞர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். வேலைவாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும். மேற்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் கனவு நனவாகும். ஆசை பூர்த்தியாகும். எல்லா வகையிலும் லாப குருவின் இக்காலம் உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.

பரிகாரம்
ஆலங்குடிக்கு ஒருமுறை சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதுடன், திருநள்ளாறுக்கும் திருக்கடையூறுக்கும் சென்று வருவது நன்மையாகும்

ShareTweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

போலி செய்தி பரப்பிய டைம்ஸ் ஆஃப் இண்டியா! ஆதராத்தோடு போலி நிருபர்களை காலி செய்த அண்ணாமலை!

போலி செய்தி பரப்பிய டைம்ஸ் ஆஃப் இண்டியா! ஆதராத்தோடு போலி நிருபர்களை காலி செய்த அண்ணாமலை!

January 3, 2022
மீண்டும் அமித்ஷாவை சந்திக்கும் சரத் பவர்! 2024 தேர்தலில் எதிர்கட்சிகளை அடித்து நொறுக்க அமித்ஷா மாஸ்டர் பிளான்!

மீண்டும் அமித்ஷாவை சந்திக்கும் சரத் பவர்! 2024 தேர்தலில் எதிர்கட்சிகளை அடித்து நொறுக்க அமித்ஷா மாஸ்டர் பிளான்!

August 6, 2021
இந்த டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் -அண்ணாமலை அதிரடி..

இந்த டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் -அண்ணாமலை அதிரடி..

June 9, 2022
இந்தியா வெளியுறவுக்கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் !

இந்தியா வெளியுறவுக்கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் !

March 21, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x