பாராளுமன்ற தேர்தல் தேர்தல்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்வெளியாகும். இந்தியாவின் திருவிழாவான பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. மாபெரும் பலம் பொருந்திய பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு எதிர்கட்சிகள் பல திட்டங்களை வகுத்தாலும் அது தோல்வியே சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் யார் வந்தாலும் நாங்க தான் ராஜா என்ற முனைப்போடு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தைப்பூசம் திருநாளான இன்று பா.ஜ.,வின் முதல் பிரசார வீடியோவை பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார். வீடியோவில், ராமர் கோயில் திறப்பு, நிலவில் சந்திரயான் விண்கலம் இறங்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கட்சித் தொண்டர்கள் அனைவரும் மக்களின் உணர்வுடன் தங்களை எதிரொலிக்க வேண்டும். இந்த முக்கியமான பிரசாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரப்ப வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து, நமோ செயலி மூலம் கருத்து தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் ரேஸில் முந்தியுள்ளது பா.ஜ.க தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புக்களும் பாஜகவுக்கே சாதகமாக உள்ளதால் பாஜக உற்சாகத்துடன் தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் கூட்டணி இறுதியாகிவிடும். என்கிறது தமிழக பா.ஜ.க வட்டாரங்கள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















