கோவை மாவட்டத்தை சேர்ந்த மதுக்கரையில் இயங்கிவரும் ACC சிமெண்ட் ஆலையில் இருந்து வரும் நச்சு புகையினால் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள் தொடர்ந்து பாதித்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தார்கள். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் சிறு போராட்டம் நடத்தினார்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காவல் துறையினரை வைத்து சமளித்துவந்தார்கள். ஏனென்றால் அது திமுகவின் பெரும்புள்ளிக்கு ஆலையில் பெரும் பங்கு உள்ளது என்ற செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் விவசாய நிலங்களை காத்திடவும் பொதுமக்கள் உடல்நிலையை பேணிக்காத்திட ACC சிமெண்ட் ஆலையை எதிர்த்து கோவை தெற்கு மாவட்ட பாஜக களத்தில் இறங்கியுள்ளது. ACC சிமெண்ட் ஆலையை மூட கோரி பொதுமக்களுடன் கைகோர்த்து நிற்கிறது பாஜக. மதுக்கரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டது. #save_madhukarai என முழக்கத்துடன் பா.ஜ.க வின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாஜகவினர் கலந்து கொண்டார்கள். இது குறித்து ஒரு செய்தியும் எந்த ஊடங்ககளிலும் வரவில்லை. திருமுருகன் காந்தி அமீர் போன்றார் 5 பேரோடு ரோட்டில் நின்றாலே பிரேக்கிங் நியூஸ் போடும் ஊடகங்கள் கோவையில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை ஏன் பெரிதாக சொல்லவில்லை. இது ஸ்டெர்லைட்க்கு குடுத்த முக்கியத்தும் இதற்கு ஏன் கொடுக்கவில்லை. ஊடகங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி தமிழகத்திலும் கோவை வெளிநாட்டிலுமா இருக்கிறது.
தமிழக ஊடங்கங்கள் தங்களின் பொறுப்புகளை மறந்து நடுநிலையாக இல்லாமல் ஆர்.எஸ். பாரதி ஊடகமாக செயல்படுகிறது.
பாஜக வளர்ந்து வருவது திராவிட கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் பிடியில் இருக்கும் ஊடகங்கள் பாஜக முன்னிறுத்தும் போராட்டங்களை மழுங்கடித்து விடுகிறார்கள். தமிழக மக்களே ஊடகங்கள் திமுகவின் கைப்பாவையாக செய்லபடுகிறது.
கோவை மக்களுக்கு நாமும் கைகொடுப்போம்