குடியரசுத் தலைவர் தேர்தலில் தட்டி தூக்கும் பா.ஜ.க! எதிர்க்கட்சிகளும் பா.ஜ.கவுக்கு ஆதரவு! மம்தாவுக்கு அதிர்ச்சி!

ஒரு பழங்குடியின பெண் இந்திய தேசத்தின் அடுத்த குடியரசு தலைவர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளால் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் குடியரசு தலைவர் வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பழங்குடி இனத்தை சேர்ந்த திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹா இவர் ஆர்.எஸ் எஸ். பின்புலம் கொண்டவர் முன்னாள் பா.ஜ.ககாரர்தான்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி கை தான் ஓங்கி உள்ளது. ஒன்றரை சதவீத வாக்குகள்தான் தேவைப்படும்.பா.ஜ.வுக்கு ஒடிஷாவின் உள்ள பிஜூ ஜனதாதளமும் ஆந்திராவில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் பல சூழ்நிலைகளில் தங்களின் ஆதரவை வழங்கி வந்திருக்கின்றன. கடந்த 2017 குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த அவர்களை ஆதரித்தனர். .

இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு அறிவைக்கப்பட்டார். , “ஒடிஷாவில் பா.ஜ.க – பிஜூ ஜனதா தள கூட்டணி ஆட்சியில் இரு முறை எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் இருந்தவர் தான் திரெளபதி முர்மு. இதற்கிடையே திரெளபதி முர்முவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பீஹார் முதல்வருமான நிதிஷ் குமாரும், திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று உள்ளார்.வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் முதல்வராக உள்ள பிரேம் சிங் தமாங்கும் தன் ஆதரவை தெரிவித்துள்ளார்

ஒடிஷா முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளதாவது:
“நாட்டின் மிக உயரிய பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் விவாதித்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன் ஒடிசா மக்களுக்கு இது உண்மையிலேயே பெருமையான தருணம். முர்மு, நாட்டில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.” என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார்.

Exit mobile version