ஜாதியை காட்டி ஓட்டு வாங்கும் திராவிட அரசியலின் முகத்திரையை கிழித்த பீகார் பா.ஜ.க

பீகாரில் பிஜேபிக்கு இரண்டு துணை முத ல்வர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதில் ரேணு தேவியும் ஒருவர்.

ரேணுதேவி பிஜேபியை பீகாரில் குக்கிராமங்களில் கூட வளர்த்து வரும் ஒரு சிறந்த அரசியல் வாதி.

ரேணு தேவி நோனியா என்கிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்
நோனியா மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்னவென்றால் தங்களை எஸ்டி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்பதே.

ஆக ரேணு தேவி பழங்குடி இனத்தின் பிரதிநிதி என்றே கூற வேண்டும்.பெட்டியா சட்டமன்ற தொகுதியில் 2000 ம் ஆ ண்டில் இருந்து 5 முறை வெற்றி பெற்று இருக்கிறார்.


ஆர்எஸ்எஸ் அமைப்பின் துர்கா வாகினி அடுத்து பிஜேபி யின் மகிளா மோர்ச்சா என்று ரேணு தேவி அரசியலில் நீண்ட
காலமாக இருக்கிறார்.

நிதிஷ்குமார் அமைச்சரவையில் 2010-15 காலத்தில் அமைச்சராகவும் இருந்து இருக்கிறார்.

பாருங்கள் காரை விட்டு இறங்காமல் அரசியல் செய்து பதவிக்கு வர நினைக்கும்
மனிதர்களுக்கு மத்தியில் ரோடுகளே இல்லாத மலைப்பகுதியில் அரசியலில் அங்கீகாரம் கிடைத்த பிறகும் கட்சியை வளர்க்கும் ரேணு தேவியின் அர்ப்பணிப்புக்காக கடவுள் அளித்த பரிசு தான்
பீகாரின் துணை முதல்வர்.

வாழ்த்துகள் ரேணு தேவி.

கட்டுரை எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version