திமுகவை சம்பவம் செய்த பா.ஜ.,வினர் ! மன்னிப்பு கேட்க முடியாது…’ வாசகத்துடன் ‘டி-சர்ட் !

திமுகவை சம்பவம் செய்த பா.ஜ.,வினர் ! மன்னிப்பு கேட்க முடியாது…’ வாசகத்துடன் ‘டி-சர்ட் !

பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என்ற வாசகங்களுடன் கூடிய ‘டி-சர்ட்’ அணிந்து, சமூக வலைதளங்களில் பா.ஜ.,வினர் புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட, தி.மு.க., முக்கிய புள்ளிகளின், சொத்து பட்டியலை வெளியிட்ட பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதற்கு, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்., பாரதி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் இழப்பீடு கேட்டு திமுகவினர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த விவகாரத்தில், வக்கீல் வாயிலாக அண்ணாமலை பதில் அனுப்பினார். அதில், ”ஊழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக தி.மு.க., வினர் சொத்து குறித்து வெளியிட்ட செய்தி உண்மை. தி.மு.க.,வினர் மீதான புகார், பொது தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இதில், மன்னிப்பு கேட்க மாட்டேன். இழப்பீடு வழங்க முடியாது. வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார்” என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இதனால், அண்ணாமலையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பா.ஜ.,வினர் , ‘மன்னிப்பு கேட்க முடியாது ‘ என வாசகம் அச்சிட்ட டி-சர்ட் அணிந்து, சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version