மேற்குவங்கத்தில் கொடூரத்தின் உச்சம் பா.ஜ.க தொண்டரின் மனைவியை கூட்டு பலாத்கராம் செய்த மம்தா கட்சியினர்.

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் பாஜக தொண்டரின் 34 வயது மனைவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) மேற்குவங்க முதல்வர் மம்தாபார்னர்ஜி கட்சியின் (TMC ) நிர்வாகிகளால் ‘பாலியல் பலாத்காரம்’ செய்யப்பட்டுள்ளார் .

சனிக்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்த்துறை தயங்கி வருகிறது

கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது திரிணாமுல் காங்கிரஸ் ஆடிய வெறியாட்டத்தில் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்ப குடும்ப உறுப்பினர்கள் கொடுமையன முறையில் தாக்கப்பட்டார்கள். அப்போது தொடங்கிய வன்முறை தற்போது வரை நீடித்து வருகிறது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் வெற்றி பெற்றது.

மே 2ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெ(ற்)றியாட்டம் ,இந்தியாவை நிலைகுலைய செய்தது. மம்தாவிற்கு ஒட்டு போடாதவர்கள் சொந்தம் ,சொத்து ,அனைத்தையும் இழந்து நிற்கும், மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள்..காரணம் திரிணமூல் காங்கிரஸின் (TMC) வெற்றி.ஜனநாயகத்தை புதைத்து அதன் மீது திரிணாமுல் காங்கிரசின் வெறியாட்டம் நடந்தேறியுள்ளது. தாக்கப்பட்டவர்கள் பாஜகவிற்கு ஒட்டு போட்டவர்கள் என்று கூறுகிறது ஆய்வு அறிவிக்கை.

சிலிகுரி அடுத்துள்ள புதிய ஜல்பாய்குடி போன்ற எல்லைப்புற மாவட்டங்களில் வன்முறையின் கொடுமைகள அதிகம். சுமார் 2200 மக்கள் அடித்து விரட்டப்பட்டும் தப்பித்தும் அஸ்ஸாம் மற்றும் பீஹாரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.5000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு திரும்பவில்லை. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீது பலமான தாக்குதல்கள் நடந்துள்ளன.யாராவது புகார் கொடுக்க காவல்துறை சென்றால் எந்த புகாரையும் வாங்க மறுக்கின்றனர். அடிபட்ட காயம்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் அளிக்கப்படவில்லை . சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே அதை மீறுகிறது.

திரிணாமுல் கட்சியினர் நடத்திய வன்முறையில் 40 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை வழக்குகளை என்ஹெச்ஆர்சி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டது.

என்ஹெச்ஆர்சி, கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில், டிஎம்சியின் அரசியல் எதிரிகளை வன்முறையின் மூலம் டிஎம்சி நிர்வாகிகளுடன் மாநில நிர்வாகம் எவ்வாறு கைகோர்த்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

பிஜேபி தேசிய சமூகஊடக பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், “பாஜக நிர்வாகியின் 34 வயது மனைவியை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பக்னனில் உள்ள மற்றவர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். உள்ளூர் காவல்துறை ஆரம்பத்தில் அவரது புகாரைக் கூட வாங்க மறுத்து வழக்கை நீர்த்துப்போகச் செய்தது.

மேற்குவங்க முதல்வர் மம்தாபார்னர்ஜி கட்சியின் நிர்வாகிகளால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.வன்முறையால் அனைவரையும் அடக்கநினைக்கும் மம்தாவிற்கு யார் பாடம் புகட்டுவார்.

Exit mobile version