சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம்…!
நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளில் கட்சியை வலுப்படுத்தற்கும் ஆன அமித்ஷா திட்டமிட்டார் என திரிபுரா முதலமைச்சர் கூறியிருப்பது, பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேவ் பாரதீய ஜனதா கட்சியை இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளிலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது என்றும், இதுகுறித்த திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடன் பகிர்ந்து கொண்டார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
என்ன நடந்தாலும் பொருந்திருந்து பார்ப்போம் ….
ஞாயிற்றுக்கிழமை அன்று திரிபுரா மாநிலம அகர்தலாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பிப்லப் தேவ், இந்த தகவலை மற்றவர்களிடம் கூறினார்.
2018 திரிபுராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷாவுடனான சந்திப்பை பிப்லப் தேவ் நினைவு கூறுகையில், இது குறித்து தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அமித்ஷா அந்த சமயத்தில் பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தார். இந்த சமயத்தில் இது குறித்து பேசியதாக கூறியுள்ளார்,
கட்சித் தலைவராக அமித் ஷாவின் தலைமையைப் பாராட்டிய பிப்லப் தேவ், “அப்போது பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, கட்சி தனது நிலையை விரிவுபடுத்தி நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக கட்சியை தொடக்க திட்டமிட்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்திருந்தார்.
அமித் ஷா 2014 முதல் 2020 வரை பாரதிய ஜனதா தலைவராக பணியாற்றி அமித்ஷா பல அதிரடி முடிவுகள்எதுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவாக்கும் திட்டங்களை அமித் ஷா தன்னுடன் பகிர்ந்து கொண்டார்’ என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேவ் கூறுகிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















