வேளாண் சட்டம் புதிய கல்வி கொள்கை போன்ற மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள, தி.மு.க.,வின் உண்மை முகத்தினை, பா.ஜ.க வினர், வெளிகொண்டுவருகிறார்கள். முதலில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போது தி.மு.க நடத்தும் பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டம் என கூறிய பா.ஜ.க இளைஞரணியால் கதிகலங்கியது தி.மு.க. பின் பபுதிய கல்விக்கொள்கையை பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டது
தி.மு.க. தற்போது வேளாண் சட்டத்திற்கு எதிராக, விவசாயிகளை, தி.மு.க. துாண்டி விட்டு வருகிறது.இதை கண்டித்து வந்த பா.ஜ.க தற்போது, தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, சமூகவலைதளத்தில் அம்பலப்படுத்தி உள்ளது. ‘தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் கூறியவற்றையே, பிரதமர் நரேந்திரமோடி, புதிய வேளாண் சட்டங்களில் கொண்டு வந்துள்ளார்’ என, பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்ட பதிவு, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த, வேளாண் திருத்த சட்டங்களை, தி.மு.க., கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வினோஜ் ப செல்வம், 2016 தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 23வது பக்கத்தை, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான, ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும். இந்தக் கொள்கையின் அடிப்படையில், தமிழக வேளாண் உற்பத்தி பொருட்களை, இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வேளாண் உற்பத்தியாளர்கள், இடைத்தரகர்கள் இன்றி, தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை, சந்தை விலைக்கு ஏற்ப, விற்பனை செய்து பயன் பெறுவதற்கு உதவும் வகையில், உற்பத்தியாளரையும், வாங்குபவரையும் இணைப்பதற்கு, ‘வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு’உருவாக்கப்படும்.இந்த அமைப்பின் வழியே, அன்றாடம் சந்தை விலை நிலவரங்களை, விவசாயிகள் அறிய வாய்ப்பு ஏற்படும்.இந்த கொள்கையை, காலமாறுதலுக்கு ஏற்ப மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் ஏற்ற வகையில், வேளாண் விளைபொருள் விற்பனை சட்டம் ஒன்று உருவாக்கப்படும். இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.சூட்டை கிளப்பி உள்ளது
இதை வெளியிட்டுள்ள வினோஜ் ப செல்வம், ‘தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றையே, பிரதமர் நரேந்திரமோடி, புதிய வேளாண் சட்டங்களில் கொண்டு வந்துள்ளார். ஆனால், ஸ்டாலின் எதிர்க்கிறார்’ என, குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவும், சமூக வலைதளங்களில், தி.மு.க., – பா.ஜ.க இடையே சூட்டை கிளப்பி உள்ளது
மேலும் விவசாயிகளுக்கு எதிரான கட்சி திமுக என்றஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளது பாஜக இளைஞரணி. இந்த வீடியோ தொகுப்பில் கடந்த காலங்களில் திமுக விவசாயிகளுக்கு செய்த துரோகங்களை பட்டியிலிட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறி வருகிறது திமுக.