பா.ஜ.க மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013ஆண்டு ஜூலை 19-ம் தேதி மரவனேரி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர்.
ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பலிதானா தினத்தினை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வருடம் தோறும் கடைபிடித்துவருகின்றார்கள். இந்த நிலையில் ஜூலை 19 இன்றைய தினம் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பலிதான தினத்தினையொட்டி பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. கட்சியின் வளர்ச்சிக்காக இறுதி மூச்சு வரை பாடுபட்ட கர்மயோகி ரமேஷ் ஜி. கட்சியில் இன்று ஜொலிக்கும் பல தலைவர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளித்து பொறுப்பு கொடுத்து அவர்களை உயர்த்தியவர். பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பது தான் அவரின் லட்சியம் , கனவு அதற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்து கட்சி பணி செய்தார்.
நான் இன்று கோவை தெற்கு சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்வதற்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தவர் ஆடிட்டர் ரமேஷ் ஜி. One who inspired by example of living என்பதன் உதாரணமாய் வாழ்ந்து காட்டியவர். லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் மனதில் இன்றும் வாழும் மகத்தான அந்த மனிதருக்கு என் புகழஞ்சலி. என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.