தற்போது தமிழக அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது இந்த நிலையில் தான் பாஜக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது . பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியாக கோவை விவசாய குடும்பத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது . இது தமிழக அரசியல் கட்சியினரிடையே பரபரப்பினை உண்டாக்கியது .
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியாக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி வானதி சீனிவாசன் சென்னை பாஜக மாநில தலைமை அலுவலகம் கமலாலயத்திற்கு வருகை புரிந்தார்! அவருக்கு தமிழக பாஜக மகளிரணி சார்பில் மிக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலைகளில் பாஜக தொண்டர்கள் படை சூழ கமலாலயதை சென்றடைந்தார். பின் அங்குள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பா.ஜ.க நிர்வாகிகள் தொண்டர்கள்களின் வாழ்த்துக்களை பெற்று கொண்டார் வானதி சீனிவாசன்!
இந்நிலையில், தமிழக தனியார் தொலைக்காட்சிக்கு நிருபர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். தமிழக பா.ஜ.கவின் வளர்ச்சிக்காகவே தன்னை நியமித்துள்ளதாகவும், தமிழக பாஜக நிச்சயம் வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வானதி சீனிவாசன். மேலும் தமிழக பா.ஜ.க வின் முதல்வர் வேட்பாளராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், முதலில் சட்டமன்றத்திற்குள் எங்கள் எம்எல்ஏக்கள் அமரவேண்டும்; தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அனைவரும் வேலை செய்து வருகிறோம்.அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்கான வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.
இந்த நிலையில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளர் இளைஞர் அண்ணாமலை ஐ.பி.எஸ் என கூறி வந்தார்கள். ஆனால் அண்ணாமலை அவர்களே 2021 தேர்தலில் வானதி சீனிவாசனின் பங்கு முக்கிய பங்காற்றும் என சூசகமாக தெரிவித்தார் . தமிழகத்தில் பெண் என்றால் ஒருவித ஆதரவு என்பது எப்போதும் இருக்கும். தற்போது தமிழக அரசியலில் பெண் அரசியல்வாதிகள் யாரும் முன்னிறுத்தப்படாத நிலையில் வானதி சீனிவாசன் அவர்களுக்கு தற்போது பா.ஜ.கவில் முக்கியத்துவம் தந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தில் பெண் அரசியல் எனபது இல்லை என்ற நேரத்தில் மிக பெரிய பதவி வானதி சீனிவாசனுக்கு அளித்திருப்பது ஆயிரம் கேள்விகளை உண்டாக்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் பாஜக மாநில தலைவர் முருகனும் நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தது குறிப்பிடதக்கது. அதே போல் மகளிரணி தலைவராக நியமிக்கபடட்டுள்ள வானதி சீனிவாசன் அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் முதல் தமிழக அமைச்சர் துணை முதல்வர் வரை வாழ்த்துக்கள் சொல்லாத நபர்களே இல்லை.
வானதி சீனிவாசன் இல்லத்தரசிகளிடையே எளிதில் சென்றடைவார். அவருக்கு என பெண்களின் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. அமைதியானவர் ,மேலும் கோவையில் பெண்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று தந்தவர், பூக்கடை வைத்திருக்கும் பெண்கள் முதல் பேஷன் ஷோ நடத்தும் பெண்கள் வரை அனைவருக்கும் போட்டிகள் நடத்தி அசத்தியவர் . கோவையை போல் தமிழகமெங்கும் பெண்களை கவரும் வகையில் இவரின் சுற்றுப்பயணம் அமையலாம் என எதிர்பார்க்கப்ட்டுள்ளது.
மேலும் இவர் அவ்வளவு ஆளுமை படைத்தவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை பம்பரமாக சுழன்று கொண்டிருப்பவர் தான் வானதி சீனிவாசன்! கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து கொடுப்பவர்.பாஜகவின் ஒட்டுமொத்த குரலாக வானதி சீனிவாசன் ஒலித்தால் தமிழக அரசியிலில் மீண்டும் ஒரு பெண் ஆள வாய்ப்புக்கள் உள்ளது.