பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. கோவை கார் குண்டு வெடிப்பு… தமிழகம் முழுவதும் வேட்டையில் இறங்கிய NIA..

nia team

nia team

கடந்த ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் NIA.. அதிரடி சோதனையில் இறங்கியுள்ளது.அதுமட்டுமில்லாமல் கடந்த வியாழக்கிழமை அன்று சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு 10.30 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில் இந்த சோதனை நடைபெறுவதனால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழன் அன்று சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக ஓரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது அந்த மின்னஞ்சலில், “உங்கள் பள்ளிக்கூடத்தில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எந்தப் பாவமும் அறியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை எடுக்கக்கூடியவை. நேரம் குறைந்துகொண்டே வருகிறது.

உடனடியாக எல்லோரையும் கட்டடத்தில் இருந்து வெளியேற்றவும். இல்லாவிட்டால் இந்தத் துயரத்தைத் தவிர்க்க முடியாது. இது ஒன்றும் வேடிக்கையல்ல. உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்ற அந்த இமெயில் அனுப்பப்பட்டிருந்தது அதன் பின் அது புரளி என தமிழக காவல்துறை கூறியது.

அதுமட்டுமில்லாமல் ஒரே மெயில் ஐடியில் இருந்து பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அந்த ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மிரட்டல் விடுக்க வெளிநாடுகளில் உள்ள தனியார் இணையதள சேவையைப் பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்தே சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலை நாட போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பாகப் பல பகீர் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை உள்பட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை, உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு அக்., 23ம் தேதி, கார் குண்டுவெடிப்பு நடந்தது. குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபீன், இதில் பலியானார்.

உயிரிழந்த முபீனுக்கு உதவியாக இருந்த கோவை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த உமர் பாரூக், ஷேக் ஹிதயதுல்லா, பெரோஸ், இஸ்மாயில், சனோபர் அலி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நிதி திரட்டுதல் மற்றும் தாக்குதல் நடந்த உபகரணங்கள் வாங்குவதற்கு உதவியாக இருந்தவர் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை உள்பட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்

மதுரையில் NIA அதிகாரிகள் சோதனை:
மதுரையில் உள்ள ஹாஜிமார்தெரு பகுதியில் உள்ள நபரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் அலி ஜிகாத் என்பவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக NIA அதிகாரிகள் வருகை புரிந்தனர். இவர் வக்தே- இஸ்லாம் என்ற அமைப்பில் இருந்துவந்த நிலையில் கோவையில் கோவில் அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

விருத்தாசலத்தில் என்.ஐ.ஏ., சோதனை:
விருத்தாசலம் அருகே மங்கலம் பேட்டையில் சுலைமான் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் என்.ஐ.ஏ., சோதனை:
கோவையில் உக்கடம் அல் அமீன் காலனி உள்பட, 12 இடங்களில் அதிகாலை முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள பக்ருதீன்(35) வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:
அஷ்ரப் அலி என்பவர் சிங்காரத் தோப்பில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார் , இவரது வீடு பீமநகர் கூனிபஜார், பகுதியில் அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களில் NIA சோதனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version