விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வக்கீல்கள் வரம்புக்கு மீறி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். மேலும் சாதி ரீதியில் பேசி சாதி சண்டையை உண்டாக்கும் அளவிற்கு அவர்களின் பேச்சு இருக்கும். பின் பி.சி.ஆர். சட்டம் மூலம் தப்பித்துவிடுவார்கள்.இது தான் வி.சி.க கட்சியினர் அடாவடிகளுக்கு காரணம் என கூறிவருகிறார்கள் மற்ற தரப்பினர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் ராஜேஷ்பார் இவர் கவுன்சில் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஆவார். ராஜேஷ் குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று தனியார் பேருந்து மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வழக்கறிஞர் ராஜேஷ் மீது புகார் அளித்தனர்.
சீர்காழி காவல் நிலையத்திற்குள் குடிபோதையில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ராஜேஷ் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வழக்கின் மீது விசாரணைக்கு வந்த ராஜேஷ் காவல்நிலையத்தில் உள்ளே சென்று குடிபோதையில் ஆய்வாளர் மற்றும் எஸ்.பி ஆகியோரை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியும், அங்குள்ள காவலர்களை நீ யார் உன்னை என்ன செய்கிறேன் என பார்த்து மிரட்டியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கேஸ் கொடுத்தால் கண்டிப்பாக வெட்டுவேன். மற்ற சாதியினரை தரக்குறைவாகப் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, குடியோதையில் தகராறு செய்த வழக்கறிஞரும் பார் கவுன்சில் செயலாளருமான ராஜேஷ், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ராஜா, சிவா உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.