BREAKING : மக்களவை தேர்தல்: வெற்றி கணக்கை துவக்கிய பாஜக! பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

Surat BJP

Surat BJP

மக்களவை தேர்தலானது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. முதற்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில்இரங்கம் கட்ட தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. உதயநிதியின் சனாதன பேச்சுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கண்டித்துள்ளது இது போல பல சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாஜக போட்டி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் இன்று வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி என்பவர் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பிற அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது வேட்பமனுவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து குஜராத் மாநிலம் சூரத் தொகுதிகள் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் என்பவர் போட்டி இன்றி தேர்வானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி-யை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர்.மேலும், நிலீஷ் கும்பானியின் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவுக்கும் இதே 3 பேர் தான் வேட்புமனுவில் முன்மொழித்தனர்.இதையடுத்து, சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலீஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரித்தார் என்பது குறிப்படத்தக்கது.போட்டியில் இருந்த மற்ற வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகிறார்.

Exit mobile version