BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

  1. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாகா உருவாக்கப்படும்
  2. மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும்

(நிபந்தனை: 60 வயது வரையிலான பெண்களுக்கு உரிமை தொகை; மத்திய, மாநில ஊழியர்களுக்கு விலக்கு)

  1. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள்
  2. அண்ணன் சீர் திட்டம்: 1 சவரன் தங்கம், 1 பட்டு சேலை
  3. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய்(அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை
  4. வெற்றிப் பயணத் திட்டம்: அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
  5. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக “ராணி வேலுநாச்சியார் படை” உருவாக்கப்படும்
  6. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்
  7. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart Panic Button பொருத்தப்படும்
  8. ரேசன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும்

11.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100% மானியத்தில் வழங்கப்படும்

  1. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
Exit mobile version